சென்னை: நாடு முழுக்க இருக்கும் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி ஒன்று சென்றுள்ளது. வருங்கால வைப்பு நிதிக்கு பொதுவாக வழங்கப்படும் வட்டி இன்னும் வழங்கப்படவில்லை. கடந்த 8 மாதங்களாக வட்டி வழங்கப்படாமல் உள்ளது.
Backfill Promotion
கடந்த சில நாட்களுக்கு முன்தான் பிஎப் கணக்கிற்கான வட்டிப் பணத்தை அரசு விரைவில் வங்கி கணக்கில் செலுத்தும் என்று அறிவித்தது. ஆனால் இன்னும் அந்த பணம் செலுத்தப்படவில்லை. சுமார் 7 கோடி ஊழியர்கள் இதன் பலனைப் பெறுவார்கள். ஊழியர்களின் EPF கணக்கில் எவ்வளவு வட்டித் தொகை வந்துள்ளது என்பதை எளிதாகச் சரிபார்க்கலாம்.
2023-24 நிதியாண்டுக்கான (FY24) சம்பளம் பெறும் தொழிலாளர்கள் தங்கள் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டிக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். இது தொடர்பாக மத்திய அரசு வட்டாரங்களில் விசாரித்ததில் முக்கியமான சில தகவல்கள் வெளியாகின.
கடந்த பிப்ரவரியில், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) டெபாசிட்களுக்கான வட்டி விகிதத்தை 8.15 சதவீதத்தில் இருந்து 8.25 சதவீதமாக உயர்த்தியது. வட்டி மாதந்தோறும் கணக்கிடப்பட்டு, நிதியாண்டின் குறிப்பிட்ட சில மாதங்களில் அந்த வட்டி டெபாசிட் செய்யப்படும்.இது தொடர்பாக மத்திய அரசு வட்டாரங்களில் விசாரித்ததில் , இந்த செயல்முறையானது பைப்லைனில் உள்ளது, விரைவில் அங்கு காண்பிக்கப்படும். வட்டி வரவு வைக்கப்படும் போதெல்லாம், அது முழுமையாக செலுத்தப்படும். வட்டி இழப்பு ஏற்படாது.
உங்கள் இபிஎஃப் கணக்கில் 1 லட்சம் ரூபாய் பிஎஃப் ஆக டெபாசிட் செய்யப்பட்டிருந்தால், அதற்கு வட்டியாக 8.25 ஆயிரம் ரூபாய் வரும். இதுதான் கணக்கு. அதிகபட்சம் இன்னும் 10 நாட்களில் இந்த பணம் வரவு வைக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
கண்டிப்பாக பணம் அளிக்கப்படும். இருப்பினும், FY23க்கான வட்டி மார்ச் 2024 நிலவரப்படி 281.7 மில்லியன் EPFOஉறுப்பினர்களின் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது. EPF திட்டம் சம்பளம் பெறும் ஊழியர்களுக்கான கட்டாய சேமிப்பு மற்றும் ஓய்வூதியத் திட்டமாகும். EPF விதிமுறைகளின்படி, ஊழியர்கள் ஒவ்வொரு மாதமும் தங்களின் அடிப்படை ஊதியத்தில் 12 சதவீதத்தை இந்த நிதிக்கு வழங்க வேண்டும்.
EPF வைப்புத்தொகைக்கான வட்டி விகிதம் EPFOஇன் மத்திய அறங்காவலர் குழுவால் ஆண்டுதோறும் மதிப்பாய்வு செய்யப்படுகிறது. EPFO அதிகாரப்பூர்வ இணையதளம், மிஸ்ட் கால் அழைப்புகள், SMS அல்லது உமாங் ஆப் போன்ற பல்வேறு முறைகளைப் பயன்படுத்தி உறுப்பினர்கள் தங்கள் EPF இருப்பைச் சரிபார்க்கலாம். தங்கள் பாஸ்புக்கை சோதனை செய்வதன் மூலம், உறுப்பினர்கள் தங்கள் பங்களிப்புகள், சம்பாதித்த வட்டி மற்றும் ஒட்டுமொத்த EPF இருப்பு ஆகியவற்றைக் கண்காணிக்க முடியும். பல லட்சம் ஊழியர்களுக்கு விரைவில் இந்த மகிழ்ச்சியான செய்தி தெரிவிக்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பி.எப்., அட்வான்ஸ்: இடைப்பட்ட காலத்தில் உங்களுக்கு பி.எப்., அட்வான்ஸ் வேண்டும் என்றால் அதை எளிதாக எடுத்துக்கொள்ள முடியும். விண்ணப்பித்தவர்களுக்கு பி.எப்., அட்வான்ஸ் இனி 3 நாளில் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. கல்வி, திருமணம், வீடு கட்டுதல் ஆகியவற்றிற்காக பி.எப்., தொகையிலிருந்து அட்வான்ஸ் பெற முடியும. இதற்கான முறை தானியங்கி நடைமுறையாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் விண்ணப்பித்த 3 நாளில் பி.எப்., பணம் கிடைக்கும்