மஹிமா தொகுதியை கைப்பற்றப்போவது யார்? உத்தவ் vs ஷிண்டே vs ராஜ் தாக்ரே இடையே முற்றும் மோதல்

மும்பை: மகாராஷ்டிராவில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சிவசேனாவின் கோட்டையான மஹிமா தொகுதியை கைப்பற்றப்போது யார் என்கிற மோதல்கள் அதிகரித்துள்ளன.

கடந்த 1966ம் ஆண்டு சிவாஜி பார்க் பகுதியில் பால் தாக்ரே மிகப்பெரிய பேரணியை நடத்தினார். இதுதான் சிவசேனாவின் தொடக்கம். இந்த சிவாஜி பார்க் மஹிமா தொகுதியில்தான் அமைந்திருக்கிறது. எனவே மஹிமா தொகுதி சிவசேனாவுக்கு உணர்வுப்பூர்வமான ஒன்றாகும். இந்த தொகுதியில் தோல்வியை சிவசேனா ஒருபோதும் விரும்புவதில்லை. மறுபுறம் 1966லிருந்து 40 ஆண்டுகள் கழித்து பால் தாக்ரேவின் மருமகனான ராஜ் தாக்கரே, இதே சிவாஜி பார்க் பகுதியில்தான் மகாராட்டிரா நவநிர்மாண் சேனா (எம்என்எஸ்) எனும் கட்சியை தொடங்கினார். எனவே என்எம்எஸ் கட்சிக்கும் இந்த தொகுதி முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

கட்சி உருவான தொகுதியில் தோல்வியை சிவசேனா மற்றும் எம்என்எஸ் கட்சி தலைவர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இப்படி இருக்கையில் இந்த சட்டப்பேரவை தேர்தலில் மஹிமா தொகுதியை யார் கைப்பற்றப்போகிறார்கள் என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. 10 ஆண்டுகளுக்கு முன்னர் சிவசேனா பிரியாமல் இருந்ததால் மஹிமா தொகுதியை கைப்பற்ற எந்த போட்டியும் எழவில்லை. அப்போது எம்என்எஸ் கட்சி மட்டுமே எதிரணியாக இருந்தது. ஆனால், இப்போது சிவசேனா இரண்டு அணியாக பிரிந்திருப்பதால் யாருக்கு இந்த தொகுதி கிடைக்கும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த தொகுதியில் மகாயுதி கூட்டணி சார்பில் சதா சார்வார்க்கர் என்பவரும், மகா விகாஸ் அகாடி கூட்டணி சார்பில் உத்தவ் சிவசேனாவின் மகேஷ் ஸ்வாந்த் என்பவரும் போட்டியாளர்களாக களமிறக்கப்பட்டிருக்கின்றனர். மறுபுறம் எம்என்எஸ் கட்சி சார்பில் அக்கட்சியை உருவாக்கிய, ராஜ் தாக்ரேவின் மகன் அமித் தாக்ரே களமிறக்கப்பட்டிருக்கிறார். எனவே களம் சூடுபிடித்திருக்கிறது. 2009லிருந்து 2019 வரை இந்த தொகுதியில் மூன்று சட்டப்பேரவை தேர்தல்கள் நடந்திருக்கின்றன.

இதில் 2009ல் மட்டும் என்எம்எஸ் கட்சியின் வேட்பாளர் வெற்றி பெற்றிருக்கிறார். அதன் பின்னர் இரண்டு தேர்தலிலும் ஒன்றுபட்ட சிவசேனாவின் சதா சார்வார்க்கர் வெற்றி பெற்றிருக்கிறார். எனவே இந்த முறையும் அவரே வெற்றி பெறுவார் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

ஏற்கெனவே சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், மகா விகாடி அகாஸ் கூட்டணி பெரும் வெற்றியை பெற்றிருக்கிறது. எனவே, இந்த வெற்றியை சட்டமன்ற தேர்தலிலும் தக்க வைத்துக்கொள்ள இக்கூட்டணி கடுமையாக போராடி வருகிறது. மறுபுறம் பாஜக+ஷிண்டே சிவசேனா+அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸின் மகாயுதி கூட்டணி, இந்த தேர்தலில் வெற்றி பெற்றால்தான் அரசியலில் நிலைத்து நிற்க முடியும் என்பதால், வெற்றிக்காக தீவிரமாக முயன்று வருகிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் நவம்பர் 20ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக நடக்கிறது. நவ. 23ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

ಬಿಸಿ ಬಿಸಿ ಸುದ್ದಿ

ಕ್ರಿಕೆಟ್ ಲೈವ್ ಸ್ಕೋರ್

ಚಿನ್ನ ಮತ್ತು ಬೆಳ್ಳಿ ಬೆಲೆಗಳು