நடிகை சானியா ஐயப்பன் சுடிதாரில் க்யூட்டாக சிரிக்கும் புகைப்படங்களை இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.

1/7
Photo Credit: Instagram
மலையாள நடிகை சானியா ஐயப்பன் மாடர்ன் உடைகளில் போட்டோஷூட் செய்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் செய்து இளைஞர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார்.

2/7
Photo Credit: Instagram
தென்னிந்திய சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் நடிகை சானியா ஐயப்பன். நடிப்பின் மீது அதிக ஆர்வம் கொண்ட சானியா மலையாளத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

3/7
Photo Credit: Instagram
சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்த சானியாவுக்கு, 2018ஆம் ஆண்டு குயின் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். பின்னர், லூசிஃபர் படத்திலும் நடித்திருந்தார்.

4/7
Photo Credit: Instagram
தொடர்ந்து மலையாள படங்களில் நடித்து வரும் சானியாவுக்கு தமிழிலும் வாய்ப்பு கிடைத்தது. இயக்குநர் யுவராஜ் தயாளன் இயக்கத்தில் வெளியான இறுகப்பற்று படத்தில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகியுள்ளார்.

5/7
Photo Credit: Instagram
இப்படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து தமிழில் பட வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ப்ரிதிவிராஜ் இயக்கும் படமான மலையாள படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

6/7
Photo Credit: Instagram
திரைப்படங்களை தொடர்ந்து சோசியல் மீடியாக்களிலும் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் சுமார் 2.8 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோவர்ஸ் வைத்திருக்கிறார் சானியா.

7/7
Photo Credit: Instagram
இவர் தற்போது ஆர் ஜே பாலாஜியுடன் இணைந்து நடித்த சொர்க்கவாசல் படம் வெளியாகவுள்ளது. அதற்கான ப்ரோமோஷன் வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார். சானியாவின் லேட்டஸ்ட் போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.