vishwakarma scheme: கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி மத்திய அரசால் விஸ்வகர்மா திட்டம் தொடங்கப்பட்டது. கைவினை கலைஞர்களுக்கு ஆதரவு வழங்கும் வகையில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின் மூலம் தொழிலாளர்களுக்கு உதவித்தொகை மற்றும் பயிற்சி ஆகியவை வழங்கப்படுகிறது.
விஸ்வகர்மா திட்டம்: பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாட்டில் தற்போதைய அரசு செயல்படுத்ததாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் சமூகநீதி அடிப்படையில் தமிழகத்தில் உள்ள கைவினை கலைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் விரிவான திட்டம் ஒன்றை உருவாக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சரான ஜித்தன் ராம் மஞ்சிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அந்த கடிதத்தில் நடப்பாண்டு ஜனவரி மாதம் 4 ஆம் தேதி விஸ்வகர்மா திட்டத்தில் உரிய திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு அரசு சார்பில் பிரதமர் மோடிக்கு எழுதப்பட்ட கடிதத்தை முதலமைச்சர் ஸ்டாலின் சுட்டிக்காட்டி உள்ளார். விஸ்வகர்மா திட்டம் சாதி அடிப்படையில் என தொழில் முறையை வலுப்படுத்தும் என்பதால் இதனை ஆய்வு செய்த தமிழ்நாடு அரசு சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு விரிவான ஆய்வை மேற்கொண்டு சில மாற்றங்களை செய்த பரிந்துரைத்தது.
சொல்லப்பட்ட பரிந்துரைகள்
அதன்படி, “விண்ணப்பதாரரின் குடும்பம் பாரம்பரியமாக குடும்ப அடிப்படையில் செய்யப்பட்டு வரும் தொழிலில் ஈடுபட வேண்டிய கட்டாயத் தேவை நீக்கப்பட வேண்டும். மேலும் அதற்கு பதிலாக வழிகாட்டுதல்களில் பட்டியலிடப்பட்டுள்ள எந்த ஒரு தொழிலையும் மேற்கொள்ள விரும்பும் எந்த நபரும் இந்த திட்டத்தின் கீழ் உதவி பெற தகுதி உடையவராக இருக்க வேண்டும்.
இந்தத் திட்டத்தில் பயன் பெறுவது குறைந்தபட்ச வயது வரம்பு 35 ஆக உயர்த்தலாம். இதனால் தங்கள் குடும்ப பொருளாதாரத்தைத் தவிர அதனை நன்கு அறிந்தவர்கள் மட்டுமே இந்த திட்டத்தின் கீழ் பலன்களை பெற முடியும். கிராமப்புறங்களில் உள்ள பயனாளிகளை சரிபார்க்க பொறுப்பு கிராம பஞ்சாயத்திற்கு தலைவருக்கு பதிலாக வருவாய் துறையைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என தெரிவித்திருந்தது.
ஆனால் மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம் மார்ச் 15ஆம் தேதி அளித்த பதிலில் மேற்படி பரிந்துரைக்கப்பட்ட திருத்தங்கள் தொடர்பாக எதுவும் குறிப்பிடப்படவில்லை என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். எனவே பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தற்போதைய வடிவில் செயல்படுத்துவதை தமிழ்நாடு அரசு முன்னெடுத்து செல்லாது என ஒரு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
புதிய திட்டம் உருவாக்கப்படும்
விஸ்வகர்மா திட்டம் என்றால் என்ன?
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி மத்திய அரசால் விஸ்வகர்மா திட்டம் தொடங்கப்பட்டது. கைவினை கலைஞர்களுக்கு ஆதரவு வழங்கும் வகையில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின் மூலம் தொழிலாளர்களுக்கு உதவித்தொகை மற்றும் பயிற்சி ஆகியவை வழங்கப்படுகிறது. மேலும் அவர்கள் தாங்கள் உருவாக்கும் பொருட்களை சந்தைப்படுத்தவும், வணிக சந்தையில் விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகளும் மத்திய அரசு தரப்பில் ஆதரவு அளிக்கப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் மட்டும் 10 ஆயிரம் பயனாளிகள் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மூன்று கட்ட சரிபார்ப்பு நடவடிக்கைகளுக்குப் பிறகு இந்த திட்டத்தில் பயனாளிகள் சேர்க்கப்படுவார்கள்.
அதேசமயம் கர்நாடகாவில் 6.28 லட்சம், மேற்கு வங்கும் 4.04 லட்சம், அசாம் 1.8 லட்சம், உத்தரப்பிரதேசம் 1.5 லட்சம், ஆந்திர பிரதேசம் 1.2 லட்சம் ஆகியவை அதிகமான நபர்கள் விண்ணப்பித்த மாநிலமாக இருந்தது. அதேசமயம் தமிழ்நாடு, கேரளா, சத்தீஸ்கர், இமாச்சலப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் குறைவான விண்ணப்பங்களைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.