விடுதலை ரிலீஸ்… வெற்றிமாறன் அடுத்ததாக இயக்கப்போவது இந்த நடிகரின் படம் தானா?

Director Vetrimaaran: இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான விடுதலை பாகம் 2 படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில் இவரது இயக்கத்தில் அடுத்ததாக எந்த நடிகரின் படம் உருவாக உள்ளது என்பது குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

இயக்குநர் வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 படம் வெளியாகியுள்ள நிலையில் அடுத்ததாக அவர் இயக்க உள்ள படம் குறித்த தகவல்கள் வெளியாகி கோலிவுட்டில் வைரலாகி வருகின்றது. கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி வெளியான  திரைப்படம் ‘விடுதலை’.  நடிகர்கள் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, கௌதம் மேனன், சேத்தன், ராஜீவ் மேனன்,  உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இசையமைப்பாளர் இளையராஜா இசையில் உருவான இப்படம் காவல்துறைக்கும் போராட்டக் குழுவுக்கும் இடையே நடக்கும் பிரச்சினை  மிகவும் வெளிப்படையாக பேசி இருந்தது. நடிகர் சூரி இப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். விடுதலைப் படத்தின் முதல் பாகம் ரிலீசான உடனே இரண்டாம் பாக பணிகள் தொடங்கியியது. ஆனால் சில காரணங்களால் அந்த படம் உருவாவது தொடர்ந்து தள்ளிப்போனது.

இந்த நிலையில் படம் இரண்டு வருடங்களுக்கு பிறகு நேற்று 20-ம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. முதல் பாகத்தில் போலீசாக இருக்கும் சூரி குறித்தும் மக்கள் படை என்ற போராட்ட குழு தலைவராக இருக்கும் விஜய் சேதுபதி குறித்த அறிமுகமும் அதிகமாக காட்டப்பட்டது. முதல் பாக இறுதியில் தனது காதலியை காப்பாற்ற நீண்ட நாட்களாக போலிசிடம் சிக்காமல் இருந்த விஜய் சேதுபதியை சூரி உதவியுடன் மற்ற போலீசார்கள் பிடிப்பார்கள்.

இந்த நிலையில் முதல் பாகத்தில் போலிசிடம் சிக்கிய விஜய் சேதுபதி தப்பித்தாரா அவருக்கு என்ன நடத்தது என்பது மற்றும் அவர் இவ்வாறு போராட்டக்குழு தலைவராக மாற என்ன காரணம் அவருக்கு குடும்பம் உள்ளதா என்பதுதான் இரண்டாம் பாகத்தில் எடுக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தில் சூரி அதிகமாக காட்டப்பட்ட நிலையில் இரண்டாம் பாகம் விஜய் சேதுபதி அதிகமாக காட்சியளிக்கிறார்.

அதிகாரம் என்பது யார் கையில் இருந்தாலும் அது மக்களுக்கானதாக இருக்காது என்பதே வெற்றிமாறனின் விடுதலை பாகம் இரண்டின் ஒன் லைன் ஆகும். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் கலவையான விமர்சனத்தை பெற்று வருகின்றது. இந்த நிலையில் இயக்குநர் வெற்றிமாறனின் அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியாகி கோலிவுட் வட்டாரத்தில் வைரலாகி வருகின்றது.

அதன்படி இயக்குநர் வெற்றிமாறன் அடுத்ததாக இயக்க உள்ளது நடிகர் சூர்யாவின் நடிப்பில் வாடிவாசல் என்று தெரிவிக்கப்படுகிறது. சூர்யா நடிப்பில் இறுதியாக வெளியான கங்குவா படத்திற்கு முன்னதாக வெளியான படம் எதற்கும் துணிந்தவன். இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக தோல்வியை சந்தித்தது.

தொடர்ந்து சூர்யாவின் படங்கள் தோல்வியை சந்தித்து வரும் நிலையில் சூர்யா தற்போது இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனது 44 படத்தில் நடித்து வருகிறார். வித்யாசமான தோற்றத்தில் சூர்யா இருக்கும் அறிமுக வீடியோவை பல மாதங்களுக்கு முன் படக்குழு வெளியிட்டு எதிர்பார்ப்பை எகிற வைத்தது. அதனை தொடர்ந்து சூர்யா நடிகரும், இயக்குநருமான ஆர்.ஜே.பாலாஜியின் இயக்கத்தில் தனது 45-வது படத்திற்காக கமிட்டானர். இதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி இணையத்தில் வைரலானது.

இந்த நிலையில் இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் சூர்யா கூட்டணியில் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு பணிகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தொடங்க உள்ளது என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகின்றது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடதக்கது.

VS NEWS DESK
Author: VS NEWS DESK

pradeep blr