Margazhi Amavasai 2024: மார்கழி அமாவாசை எப்போது? – இப்படி தானம் செய்தால் புண்ணியம்!

பொதுவாகவே அமாவாசை திதி முன்னோர்களை வழிபட உகந்த நாளாகும். மாதம்தோறும் சிலர் இந்த நாட்களில் முன்னோர்களை நினைத்து விரதம் இருப்பார்கள். அப்படிப்பட்ட நாளில் விரதம் இருக்க முடியாதவர்கள் தை, மாசி, புரட்டாசி மாதங்களில் வரும் அமாவாசையில் கண்டிப்பாக விரதம் இருக்க வேண்டும்.

இந்து மத நம்பிக்கைகளின்படி, கஷ்டப்படுபவர்கள் அவர்களின் தேவைக்கேற்றபடி தர்மம் செய்வது மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது. தானம் செய்வதன் மூலம் நல்ல பலன்களைப் பெற முடியும். இதனால் முன்னோர்கள் நாம் எவ்வளவு தீங்கு செய்திருந்தாலும் நாம் அளிக்கும் தர்மம் தலை காக்கும். தக்க சமயத்தில் உயிர் காக்கும் என தெரிவித்திருக்கிறார்கள். இந்து மதத்தைப் பொறுத்தவரை பௌர்ணமி மற்றும் அமாவாசை தினங்கள் இத்தகைய தானங்கள் கொடுப்பதற்கு சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தவையாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசை நாளில் தானம் வழங்குவதன் மூலம் முன்னோர்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என்பது நம்பிக்கையாகும். மேலும் இந்நாளில் புனித நீராடி, சில விசேஷமான பொருட்களை தானம் செய்பவர்கள் பித்ரு தோஷத்தில் இருந்து விடுபடுவார்கள் என சொல்லப்படுகிறது. இந்த ஆண்டு சோமாவதி அமாவாசை மார்கழி மாதத்தில் டிசம்பர் 30 ஆம் தேதி வருகிறது

என்ன பொருட்களை தானம் செய்ய வேண்டும்?

கருப்பு எள் தானம்: சோமாவதி அமாவாசை என்பது திங்கட்கிழமை திதி வருவதை குறிக்கும். இந்த நாளில் கருப்பு எள் தானம் செய்வது மிகவும் புண்ணியமாக கருதப்படுகிறது. முன்னோர்களை சாந்தப்படுத்தவும், தீய சக்திகளிடமிருந்து காக்கவும் கருப்பு எள் தானம் செய்யப்படுகிறது. சோமாவதி அமாவாசை நாளில் நீராடி கருப்பு எள் தானம் செய்வதால் பித்ரு தோஷம் நீங்கி வாழ்வில் மகிழ்ச்சியும் வளமும் உண்டாகும்.

வஸ்திர தானம்: இந்த அமாவாசை நாளில், முன்னோர்களின் தானம் செய்த பின் அவர்களை நினைவு கூற வேண்டும். தெரிந்தோ தெரியாமலோ செய்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும். முன்னோர்களின் ஆசி கிடைக்க வேண்டும் என வேண்டிக்கொள்ளுங்கள். வேட்டி,துண்டு, சட்டை போன்ற ஆடைகளை தானம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் முன்னோர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். இதன்மூலம் ஆசீர்வாதம் அந்த நபருக்கு பரிபூரணமாக வழங்கப்படுகிறது.

ஏழு வகையான தானியங்களை தானம் செய்தல்

சோமாவதி அமாவாசை நாளில் 7 வகையான தானியங்களை தானம் செய்வது மிகவும் புண்ணியமாக கருதப்படுகிறது. இதில் அரிசி, கோதுமை, தினை, உளுந்து, வெள்ளை எள், பருப்பு, சோளம் அல்லது பயறு போன்றவை அடங்கும். இதில் அரிசி மங்களகரமானதாகவும், கோதுமை வாழ்வின் அடிப்படையாகவும் கருதப்படுகிறது. இவற்றை தானம் செய்பவருக்கு முன்னோர்களின் ஆசிகள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

அமாவாசை திதியில் நீராடுதல் மற்றும் தானம் செய்வதன் முக்கியத்துவம்

2024 ஆம் ஆண்டின் கடைசி அமாவாசையான மார்கழி அமாவாசை திங்கட்கிழமை வருவதால் அதன் முக்கியத்துவம் மேலும் அதிகரிக்கிறது. சோமாவதி அமாவாசை நாளில் சிவபெருமானையும், பார்வதியையும் வழிபடுவது மிகவும் சிறப்பானது. ஏனெனில் இந்த நாள் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இந்த நாளில் சிவபெருமானை வழிபடுவது வீட்டில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் தருவதாக நம்பப்படுகிறது. மேலும், சோமாவதி அமாவாசை நாளில் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம், பிண்டம் வழங்கினால் பித்ரு தோஷம் விலகும்.

VS NEWS DESK
Author: VS NEWS DESK

pradeep blr