ஐயப்பனின் வலது காலடி தடம் பதிந்த இடம் இன்னும் இருக்கிறது? எங்கே தெரியுமா?

பத்தினம்திட்டா: சுவாமி ஐயப்பனின் பாதமும் புலிகளின் பாதமும் சபரிமலையில் இன்னமும் இருக்கிறது, அது உங்களுக்கு தெரியுமா? அது போல் ஐயப்பயன் புலிகளை பந்தள அரண்மனைக்கு கொண்டு வந்த போது என்ன நடந்தது என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.கார்த்திகை மாதம் முடிந்து மார்கழி தொடங்கிவிட்டது. எனினும் தெய்வங்களின் திருவிளையாடல்களை கேட்க கேட்க மெய்சிலிர்க்கும். சபரிமலையிலிருந்து 88 கி.மீ. தூரத்தில் திருவனந்தபுரத்தையும் கோட்டயத்தையும் இணைக்கும் பாதையில் உள்ளது பாதாளம். செங்கனூரில் இருந்து 10 கி.மீ. தூரம் சென்றால் பந்தளத்தை அடையலாம். ஆனால் பெரும்பாலான பக்தர்கள் பந்தளத்திற்கு செல்வதில்லை.

ஆண்டுக்கு ஒரு முறை பந்தளத்தில் இருந்து திருவாபரணப் பெட்டியானது ஐயப்பனின் சன்னிதானத்திற்கு வந்து சேரும். மார்கழி 26ஆம் தேதி பந்தளத்தில் இருந்து புறப்படும் இந்த திருவாபரணப்பெட்டி தை முதல் நாள் அன்று சபரிமலைக்கு வரும். அன்றுதான் மகர ஜோதி. வானத்தில் பருந்துடன் வட்டமிட்டுக் கொண்டு திருவாபரண பெட்டி பாதுகாப்பாக வருவதை காண கோடிக் கண் வேண்டும்.

சபரிமலையின் சிறப்புகளை மட்டும் தெரிந்து கொள்ளாமல் ஐயப்பன் தொடர்பான பல்வேறு இடங்களை பற்றியும் தெரிந்த கொள்ள வேண்டும்.

இதுகுறித்து World of Priyalakshmanan என்பவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது: சுவாமி ஐயப்பனின் பாதமும் அவர் கூட்டிக் கொண்டு வந்த புலிகளின் பாதமும் எங்கே இருக்கிறது தெரியுமா? சுவாமி ஐயப்பன் தனது வளர்ப்பு தாயின் வயிற்று வலியை போக்குவதற்காக ஒரு பெரும் புலிப்படையுடன் பந்தள அரண்மனைக்குள் வருகிறார்.

தேவர்கள்தான் புலிகளாக மாறி சுவாமி ஐயப்பனுடன் வந்தார்கள். இந்த புலிப்படையை பார்த்த பொதுமக்கள் எல்லாரும் அஞ்சி ஓடினர். அப்போது பந்தள மகாராஜாவோ, “மணிகண்டா இந்த புலிகளை கொண்டு போய் காட்டுக்குள்ளேயே விட்டுவிடுப்பா , மக்கள் எல்லாம் பயப்படுறாங்க” என்றார்.

சுவாமி ஐயப்பன் புலிகளை கொண்டு போய் விட்ட இடம்தான் புலிக்குன்னூர். இது பந்தள அரண்மனையிலிருந்து சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது. இந்த இடத்தில் புலிகளோட பாத தடங்கள் இன்னமும் அங்கேயே இருக்கிறது. அது மட்டுமில்லாமல் புலிகளின் மேல் இருந்து சுவாமி ஐயப்பன் கீழே இறங்கிய போது அவருடைய வலது கால் பதிந்த தடமும் அங்கே இருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அது போல் புலி குன்னூரில் இருந்து சுமார் ஒன்றரை கி.மீ. தொலைவில் உள்ளது குருநாதன் முகடி. ஐயப்பன் குருகுலத்தில் படித்து பல வித்தைகளைக் கற்றுக் கொண்ட இடம். இந்த இடத்திற்கு குழந்தைகளை அழைத்துச் சென்றால் குழந்தைகளுக்கு கல்வி ஞானம் வளரும்.

கேரளாவின் குளத்துப்புழை என்ற இடத்தில் சாஸ்தா கோயில் இருக்கிறது. பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இந்த தலத்தில் ஐயப்பன், குழந்தை வடிவமாக காட்சி தருகிறார். கருவறையின் நுழைவு வாயில் சிறுவர்கள் நுழையும் அளவிற்கு உயரம் குறைந்துள்ளது. இது செங்கோட்டையிலிருந்து 50 கி.மீ. தூரத்தில் உள்ளது. இங்கு விஜயதசமி அன்று வித்யாரம்பம் நிகழ்வு நடைபெறும்.

VS NEWS DESK
Author: VS NEWS DESK

pradeep blr