Emergency Quota : இந்திய ரயில்வேயின் அவசரகால கோட்டா என்றால் என்ன?.. யாரெல்லாம் இதில் பயணிக்காலாம்?

பொதுமக்கள் விரைவாக பயணம் செய்வதற்காக இந்திய ரயில்வே, பல விதமான ரயில் சேவைகளை வழங்கி வருகிறது. இந்த நிலையில், ரயில் டிக்கெட் உறுதி செய்யப்படாத நிலையில், அவசரமாக பயணிக்க வேண்டும் என்பவர்களுக்காக அவசரகால கோட்டா என்ற முறையை செயல்படுத்தி வருகிறது.

இந்தியாவை பொருத்தவரை ரயில் போக்குவரத்தும் மக்கள் மத்தியில் மிகவும் பிரதானமாக உள்ளது. குறைந்த விலையில், மிக நீண்ட தூரம் பயணிக்க ரயில்கள் சிறப்பானதாக கருதப்படும் நிலையில், ஏராளமான மக்கள் அதில் பயணிக்கின்றனர். ரயிலில் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும் என்றால் பயண சீட்டை முன்பதிவு செய்திருக்க வேண்டும். இல்லையென்றால் ரயிலில் பயணம் செய்ய அனுமதி வழங்கப்படாது. இப்படிப்பட்ட சூழலில் ரயிலில் அவசரமாக பயணிக்கும் நிலை ஏற்பட்டால், நீங்கள் அரசின் அவசரகால கோட்டாவை பயன்படுத்தி பயணம் செய்யலாம். ஆனால், அதற்கு சில கட்டுப்பாடுகள் மற்றும் விதிகள் உள்ளன.

ரயில் டிக்கெட் முன்பதிவு

தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயில்கள் மூலம் பயணம் செய்யும் நிலையில், ரயில்கள் கூட்ட நெரிசலாக காணப்படுகின்றன. அதிலும் குறிப்பாக பண்டிகை காலம் என்றால், ரயில் நிலையத்தில் நிற்பதற்கு கூட இடம் இல்லாத வகையில் மக்கள் கூட்டம் அலைமோது. இத்தகைய சூழலில் உங்கள் ரயில் டிக்கெட் உறுதி செய்யப்படவில்லை அல்லது நீங்கள் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளீர்கள் என்றால் உங்கள் பயணம் சிக்கலில் முடிந்துவிடும். இத்தகைய இக்கட்டான சூழலை கையாளும் வகையில், இந்திய ரயில்வே ஒரு சிறப்பு அம்சத்தை செயல்படுத்தி வருகிறது. அதுதான் அவசரகால கோட்டா, உடனடியாக பயணம் செய்ய வேண்டும் என்ற தேவை இருந்தும் ரயில் டிக்கெட் கிடைக்கவில்லை என்றால் இந்த திட்டம் மூலம் பயணிக்கலாம்.

அவசரகால கோட்டா என்றால் என்ன?

உடனடி தேவைகளுக்காக ரயிலில் பயணம் செய்ய வேண்டும் என்பவர்கள் இந்த அவசரகால கோட்டாவை பயன்படுத்தலாம். அவ்வாறு பயணம் செய்ய விரும்பும் நபர்கள் அரசு துறை உயர் அதிகாரிகள், உச்சநீதிமன்றம் அல்லது உயர்நீதிமன்ற நீதிபதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் கையோப்பம் இடம்பெற்ற கடிதத்தை வைத்திருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால், அரசாங்க வேலைக்காக பயணம் செய்பவர்கள், குடும்பத்தின் அவசர தேவைகள், உடல்நல பிரச்னைகள் மற்றும் வேலை நேர்முகத் தேர்வு உள்ளிட்ட காரணங்களுக்காக இந்த அவசரகால கோட்டா மூலம் பயணிக்க பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

அவசரகால கோட்டாவில் எத்தனை நபர்கள் பயணிக்கலாம்

ஒவ்வொரு ரயிலிலும் 10 ஸ்லீப்பர் கோச்சுகள் இருக்கும். இந்த ஸ்லீப்பர் கோச்சுகளில் ஒரு கோச்சுக்கு 18 சீட்டுகள் விகிதம் ஒரு ரயிலுக்கு சுமார் 180 சீட்டுகள் இந்த அவசரகால கோட்டாவுக்கு வழங்கப்படும். இந்த அவசரகால கோட்டா, மூன்றாவது, இரண்டாவது மற்றும் முதல் வகுப்பு ஏசி கோச்சுகள் என அனைத்திற்கும் பொருந்தும். அதன்படி, அனைத்து கோச்சுகளிலும் அவசரகால கோட்டாவின் கீழ் 18 சீட்டுகள் ஒதுக்கீடு செய்யபப்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

VS NEWS DESK
Author: VS NEWS DESK

pradeep blr

ಬಿಸಿ ಬಿಸಿ ಸುದ್ದಿ

ಕ್ರಿಕೆಟ್ ಲೈವ್ ಸ್ಕೋರ್

ಚಿನ್ನ ಮತ್ತು ಬೆಳ್ಳಿ ಬೆಲೆಗಳು