55th GST Council : பழைய கார் விற்பனைக்கு அதிரடி வரி உயர்வு.. ஒவ்வொரு பாப்கார்னுக்கும் ஒரு வகையான ஜிஎஸ்டி.. முழு விவரம் இதோ!

Tax | இந்தியாவில் உள்ள பெரும்பாலான பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு வரி விதிக்கப்படுகிறது. இந்த நிலையில், சில சேவை மற்றும் பொருட்களுக்கான வரிகள் 55வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மறுபரிசீலனை செய்யப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சாம்பரில் டிசம்பர் 21, 2024 மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 55வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. ஒவ்வொரு ஜிஎஸ்டி குழு கூட்டத்திலும் பல முக்கிய மாற்றங்கள் மற்றும் முடிவு எடுக்கபப்டும் நிலையில், இந்த கூட்டத்தில் பழை கார்கள் விற்பனை முதல் பாப்கார்ன் வரை அனைத்திற்கு முக்கிய வரி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் நடைபெற்றது என்ன, எந்த எந்த பொருட்களுக்கு வரி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது, எந்த எந்த பொருட்களுக்கு வரி குறைப்பு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஜிஎஸ்டி குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்

இந்த 55வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் சில பொருட்கள் மற்றும் சேவைக்கான வரி கடுமையாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், சிலவற்றுக்கு வரி குறைப்பு செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பழைய கார் விற்பனைக்கு வரி உயர்வு

வணிக நிறுவனங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் பயன்படுத்திய மற்றும் பழைய கார்களை விற்பனை செய்வதற்காக வரி 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வரி உயர்வு பழைய கார்களை விற்பனை அல்லது வாங்கும் தனிநபர்களுக்கு பொருந்தாது, நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும். மின்சார வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து பழைய மற்றும் பயன்படுத்தப்பட்ட கார்களுக்கு 12 சதவீதம் வரி விதிக்கப்பட்டு வந்த நிலையில் அது தற்போது சுமார் 18 சதவீதம் வரை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

பாப்கார்னுக்கு சுவைக்கு ஏற்ப வரி உயர்வு

ரெடிமேட் பாப்கார்ன்களுக்கான வரி விகிதங்கள் குறித்து ஜிஎஸ்டி கவுன்சில் தெளிவுபடுத்தியுள்ளது. அதாவது, முன்கூட்டியே பேக் செய்யப்பட்டு அதில் லேபில் எதுவும் அச்சிடப்படாமல் உப்பு மற்று மசாலா கலந்து விற்பனை செய்தால் அந்த வகை பாப்கார்ன்களுக்கு 5% வரி விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதுவே முன்கூட்டியே லேபில் ஒட்டப்பட்டு பேக் செய்யப்பட்ட பாப்கார்ன்களுக்கு 12% வரை வரி வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், காராமெல் உள்ளிட்ட கூடுதல் சுவை சேர்க்கப்பட்ட பாப்கார்ன்களுக்கு 18% வரி விதிக்கவும் தீர்மானம் செய்யப்பட்டுள்ளது.

வரி குறைப்பு செய்யப்பட்ட அரிசி

தற்போதைய ஜிஎஸ்டி கட்டமைப்பை எளிமையாக்கும் வகையில் செறிவூட்டப்பட்ட அரிசிக்கான வரியை 5 சதவீதம் வரை குறைக்க ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துறை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த ஜிஎஸ்டி குழு கூட்டத்தில் ஆயுள் காப்பீடு, ஹெல்த் இன்சூரன்ஸ் ஆகியற்றின் மீதான வரி மீது மறுபரிசீலனை செய்யப்படும் என்று கூறப்பட்டிருந்த நிலையில், அமைச்சர்களின் கூட்டத்தில் ஒருமித்த கருத்துகள் எடுக்கப்படாததால் இந்த விஷயங்கள் மீதான விவாதங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

VS NEWS DESK
Author: VS NEWS DESK

pradeep blr