ஆசியான் வெற்றியாளர் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் அரையிறுதி முதல் ஆட்டத்தில் வியட்னாமிடம் 2-0 எனும் கோல் கணக்கில் சிங்கப்பூர் தோல்வியுற்றது.
ஜாலான் புசார் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (டிசம்பர் 26) இரவு நடந்த இந்த ஆட்டத்தின் முதல் 90 நிமிடங்களில் கோல் எதுவும் விழவில்லை. ஆனால், 101வது நிமிடத்தில் வியட்னாமுக்கு வழங்கப்பட்ட சர்ச்சைக்குரிய பெனால்டி வாய்ப்பை அது தனக்குச் சாதகமாகப் பயன்டுத்தி கோலாக்கியது.
மூன்று நிமிடங்கள் கழித்து, 104வது நிமிடத்தில் இரண்டாவது கோலைப் போட்டு வியட்னாம் வெற்றியை உறுதிசெய்தது.
ஆட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சிங்கப்பூர் அணியின் ஜப்பானியப் பயிற்றுவிப்பாளர் சுட்டோமு ஒகுரா, இந்த ஆட்டம் தம் அணியினருக்கு துரதிர்ஷ்டவசமாக இருந்தாலும், இரண்டாம் ஆட்டத்தில் இன்னும் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்றார்.
இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான அரையிறுதி இரண்டாம் ஆட்டம் ஹனோயில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 29) நடைபெறும்.
Author: VS NEWS DESK
pradeep blr