அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில், சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
லீக் ஆன எஃப்.ஐ.ஆர்
இந்த நிலையில், மாணவி அளித்த எஃப்.ஐ.ஆர். விவரங்கள் வெளியாகின. இந்த விவகாரத்தில், எதிர்க்கட்சிகளான அ.தி.மு.க., பா.ஜ.க, பா.ம.க மற்றும் நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் ஆளுங்கட்சி மற்றும் காவல்துறை மீது குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றன.
மேலும், கைது செய்யப்பட்டுள்ள ஞான சேகரன் அன்றைய தினம் நள்ளிரவே வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்டது ஏன் எனவும் எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பி உள்ளன.
காவல் ஆணையர் பேட்டி
இந்த விவகாரங்கள் தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அருண் தனது செய்தியாளர்கள் சந்திப்பின் போது விளக்கமாக கூறினார். அப்போது, ஐ.பி.சி-யில் இருந்து தற்போது பி.என்.எஸ்.ல் வழக்குகள் பதியப்படுகின்றன.
இதனால் ஏற்பட்ட தாமதத்தின் பேரில் சிலர் அந்த எஃப்.ஐ.ஆர் நகலை பதிவிறக்கம் செய்து இருக்கலாம். மேலும், எஃப்.ஐ.ஆர் நகல் பாதிக்கப்பட்ட தரப்புக்கு கொடுக்கப்படும். மேலும், இந்த வழக்கில் எஃப்.ஐ.ஆர் தொடர்பாக யாரும் விவாதிக்கவும் சட்டத்தில் இடம் இல்லை” என்றார்.
எடப்பாடி பழனிசாமி பேட்டி
இதற்கிடையில் பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். அவருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பனவற்றை வலியுறுத்தி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, “அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையை உலுக்கியுள்ளது. இந்த விவகாரத்தில் உரிய விசாரணை தேவை.
மேலும், இந்த விவகாரத்தில் அமைச்சர் மற்றும் காவல் ஆணையர் முன்பின் முரணாக பேசியுள்ளனர். இது, சம்பந்தப்பட்ட நபரை காப்பாற்ற முயற்சிகள் நடக்கின்றனவோ என்ற சந்தேகத்தை எழுப்பிகிறது.
சி.பி.ஐ விசாரணை
அதாவது, மாணவி கல்லூரி குழுவிடம் புகார் அளித்ததாக காவல் ஆணையர் கூறியுள்ளார். ஆனால், அப்படி எதுவும் நடக்காதது போல் அமைச்சர் பேசுகிறார். சரித்திர பதிவேடு குற்றவாளியான ஞான சேகரன் எப்படி பல்கலைக்கழக வளாகத்திற்குள் புகுந்தார்?
டிச.23ஆம் தேதியே ஞான சேகரனை விசாரித்து விட்டு திருப்பி அனுப்பியது ஏன்? இந்த விவகாரத்தில் பல கேள்விகள் எழுகின்றன.
இது மட்டுமின்றி ஞானசேகரன் யாரிடமோ போனில் சார் சார் எனப் பேசியுள்ளார். அது தொடர்பாகவும் விரிவாக விசாரணை நடத்த வேண்டும். எனவே வழக்கின் தீவிரம் கருதி வழக்கை சி.பி.ஐ வசம் ஒப்படைக்க வேண்டும்” என்றார்.
யார் அந்த சார்?
ஞான சேகரன் செல்போனில் யாரிடமோ பேசியதாக இந்த வழக்கில் சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக விளக்கம் அளித்த போலீஸ் அதிகாரி, அப்படி அவர் யாரிடமும் பேசியதாக தெரியவில்லை என்றார்.
கைதான ஞான சேகரனுக்கு தற்போது நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது. போலீஸ் விசாரணையின் போது அவர் வழுக்கி விழுந்ததில் அவரின் கால் உடைந்துள்ளது எனப் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Author: VS NEWS DESK
pradeep blr