Pushpa 2 : பாக்ஸ் ஆபிஸை அலறவைக்கும் புஷ்பா 2.. வசூலில் பாகுபலி 2 படத்தை முறியடிக்க எத்தனை கோடிகள் இருக்கு?

Pushpa 2 to beat Baahubali 2 Movie: பிரபல இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் 2021ம் ஆண்டு வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் புஷ்பா. நடிகர் அல்லு அர்ஜுனின் முன்னணி நடிப்பில் வெளியான இப்படத்தின் தொடர்ச்சியாக தற்போது புஷ்பா 2 படமானது வெளியாகி உள்ளது

டோலிவுட் முன்னணி கதாநாயகனாக வலம்வருபவர் அல்லு அர்ஜுன். வைகுண்டபுரம் படத்தைத் தொடர்ந்து பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் நடித்து மிகவும் பிரம்மாண்ட திரைப்படத்தின் ஹிரோ ஆகினார். இவரின் நடிப்பில் கடந்த 2021ம் ஆண்டு முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்துடன் வெளியாகி பிரமாண்ட வெற்றி பெற்ற திரைப்படம் புஷ்பா. சுகுமாரின் இயக்கத்தில் உருவான இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, டிசம்பர் 5ம் தேதி உலகமெங்கும் புஷ்பா 2 தி ரூல் வெளியானது. இந்தப் படத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். இவர்களுடன் , ஃபஹத் பாசில் , ஜெகபதி பாபு , ஜெகதீஸ் பிரதாப் பண்டாரி, தனஞ்சயா, ராவ் ரமேஷ் மற்றும் சுனில் என பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்த திரைப்படம் வெளியாகி சுமார் 22 நாட்களைக் கடந்து பாக் ஆபிஸ் வசூலில் 2024ம் ஆண்டில் அதிகம் வசூல் செய்துள்ள படங்களில் முன்னணி இடத்தை பிடித்துள்ளது.

இந்நிலையில் இயக்குநர் ராஜமௌலியின் இயக்கத்தில் கடந்த 2017ம் ஆண்டு வெளியான திரைப்படம் பாகுபலி 2. இந்த திரைப்படமானது பாக்ஸ் ஆபிஸ் வசூலில் சுமார் ரூ 1810. 60 கோடியை வசூல் செய்து இந்தியாவிலே அதிக வசூல் செய்துள்ள திரைப்படம் என்று கூறிவரும் நிலையில், அப்படத்தின் வசூலை முறியடிக்க புஷ்பா 2 திரைப்படம் இன்னும் ரூ 69 கோடிகள் வசூல் செய்தால் போதும்.

தற்போதுவரை புஷ்பா 2 படமானது ரூ 1719.5 கோடிகளை வசூல் செய்துள்ளது. இதைத் தொடர்ந்து இன்னம் சில நாட்களில் பாகுபலி 2 படத்தின் வசூலை முறியடித்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 திரைப்படமானது தற்போது வரை திரையரங்குகளில் சிறப்பாக ஓடி வருகிறது. இந்நிலையில் இப்பபடத்தைத் தொடர்ந்து மார்கோ, விடுதலை 2 போன்ற திரைப்படங்கள் வெளியாகியுள்ள திரைப்படங்களை, புஷ்பா 2 படமானது எதிர்த்து நிற்கும் மலை போல தற்போதுவரை திரையரங்குகளில் சிறப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் முழுமையாக உருவான இப்படத்தின் பாடல்கள் இணையத்தில் பயங்கர ஹிட்டாகி வருகிறது.

கிஸ்ஸிக், பீலிங்ஸ், சொசேக்கி போன்ற பாடல்கள் தற்போது வரையிலும் ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது. இந்த புஷ்பா 2 பாகத்தின் தொடர்ச்சியாக புஷ்பா 3 திரைப்படமும் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த திரைப்படமும் வரும் 2027ம் ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ಬಿಸಿ ಬಿಸಿ ಸುದ್ದಿ

ಕ್ರಿಕೆಟ್ ಲೈವ್ ಸ್ಕೋರ್

ಚಿನ್ನ ಮತ್ತು ಬೆಳ್ಳಿ ಬೆಲೆಗಳು