Cyber Crime | தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தி பல வகையான மோசடி சம்பங்கள் அரங்கேறி வரும் நிலையில், விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கும் அரசின் பிஎம் கிசான் திட்டத்தின் மூலமும் மோசடி நடைபெற்று வருகிறது.
அதிகரிக்கும் பிஎம் கிசான் மோசடி
ஏழை விவசாயிகளின் நலனுக்காக டிஎம்கிசான் என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூபாய் 6,000 உதவி தொகை வழங்கப்படுகிறது. அதாவது, நான்கு மாதங்களுக்கு ஒரு முறை என ஆண்டுக்கு மூன்று முறை இந்த பிஎம் கிசான் திட்டத்தின் மூலம் விவசாயிகள் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படும். இது ஏழை விவசாயிகளுக்கு ஒரு சிறந்த திட்டமாக கருதப்படும் நிலையில் இந்த திட்டத்தின் பெயரை பயன்படுத்தி மோசடிக்காரர்கள் குற்ற சம்பவங்களை செய்து வருகின்றனர்.
அதாவது, பிஎம் கிசான் செயலியை பதிவிறக்கம் செய்வதற்கான லிங்க் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதனை கிளிக் செய்யும் பட்சத்தில், அதன் மூலம் மால்வேர்களை மோசடிக்காரர்கள் அந்த நபரின் மொபைல் போனில் பதிவிறக்கம் செய்கின்றனர். அதன் மூலம், வங்கி கணக்கு விவரங்கள், கடவுச் சொற்கள், முக்கிய தகவல்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் உள்ளிட்டவற்றை திருடி மோசடி செய்கின்றனர்.
பொதுமக்களை எச்சரிக்கும் காவல்துறை
இந்த பிஎம் கிசான் குறித்த போலி லிங்குகள் வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட செயலிகளில் பரவி வரும் நிலையில், இது குறித்து கூடுதல் கவனத்துடன் இருக்க காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். எனவே பொதுமக்கள் தங்கள் மொபைல் எண்ணுக்கோ அல்லது சமூக வலைத்தளங்களில் இத்தகைய லிங்குகளை பார்த்தால் அதனை உடனடியாக கிளிக் செய்யாமல் அதன் நம்பக தன்மையை சோதித்து விட்டு அடுத்தக்கட்ட நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
Author: VS NEWS DESK
pradeep blr