PMK Issue: நீயா? நானா? தந்தையிடம் மல்லுக்கட்டும் வாரிசுகள்.. இது அரசியல் ரகளை!

PMK Ramadoss Anbumani: பேரனை பாமக இளைஞரணி தலைவராக அறிவித்ததால், பாமக பொதுக் குழு கூட்டத்தின் மேடையிலேயே ராமதாசுக்கும், அன்புமணிக்கு கருத்து மோதல் ஏற்பட்டது. ராமதாஸ் கண்டிப்புடன் பேசியதோடு, கட்சியை விட்டு வெளியேறக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். தந்தை, மகன் மோதல் தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியது.

பாமக இளைஞரணி தலைவர் நியமனத்தில் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கு ஏற்பட்ட மோதல் தமிழக அரசியலில் விவாதப் பொருளாக மாறியது. விழுப்புரத்தில் பொதுக்குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நேற்றுமுன்தினம் நடந்தது. இதில் பேரன் முகுந்தனை பாமக இளைஞரணி தலைவராக அறிவித்ததால், அன்புமணி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் மேடையிலேயே ராமதாசுக்கும், அன்புமணிக்கும் கருத்து மோதல் நிலவியது. இதையடுத்து, ராமதாஸ் கண்டிப்புடன் பேசி, கட்சியை விட்டு வெளியேறக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். தந்தை, மகன் மோதல் தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியது.

அழகிரி – கருணாநிதி மோதல்

அரசியலில் தந்தை மகன் மோதலை தமிழ்நாடு பார்ப்பது முதல்முறையல்ல.  பல ஆண்டுகளுக்கு திமுகவிலேயே தந்தை மகன் மோதல் நிலவியது. பாமகவில் அன்புமணிக்கும்-ராமதாஸுக்கும் பிரச்னை இருப்பது போன்று கருணாநிதிக்கு – அழகிரிக்கும் பிரச்னை இருந்தது. குறிப்பாக 2014ஆம் ஆண்டு பிறகு கருணாநிதிக்கும் அழகிரிக்கு வார்த்தை மோதல் உச்சமடைந்தது. கருணாநிதிக்கு பிறகு தலைமை பதவியை கைப்பற்ற அழகிரி ஸ்டாலினிடம் மல்லுக்கு நின்றார்.

ஆனால், தலைமை பொறுப்பை ஸ்டாலினிடம் கொடுக்கவே கருணாநிதி விரும்பினார். இந்த அதிகாரப் போட்டியின் உச்சமாக மதுரையில் தினகரன் நாளிதழ் தீ வைத்து எரிக்கப்பட்டதில் 2 பேர் உயிரிழந்தனர். இறுதியில் திமுகவில் இருந்து அழகிரி நிரந்தரமாகவே நீக்கப்பட்டார்.  கருணாநிதி மறைவுக்கு பிறகும் கூட கட்சியில் மு.க.அழகிரி சேர்த்துக் கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அகிலேஷ் யாதவ் – முலாயம் சிங் யாதவ்

தேசிய அரசியிலிலும் தந்தை மகன் மோதல் போக்கு இருந்திருக்கிறது. அதுவும் 2017ஆம் ஆண்டு உத்தர பிரதேச சட்டமன்ற தேர்தலின்போது ஆளும் கட்சியாக இருந்த சமாஜ்வாதிக்கு இது பெரும் தலைவலியாக உருவெடுத்தது. தற்போது சமாஜ்வாதி கட்சித் தலைவராக உள்ள அகிலேஷ் யாதவ் மற்றும் அவரது தந்தை முலாயம் சிங் யாதவுக்கும் பிரச்னை இருந்தது.

அகிலேஷ் யாதவுக்கு ஆதரவான நிர்வாகிகளை சமாஜ்வாதி கட்சியில் இருந்து நீக்கியது முலாய் சிங் யாதவின் தம்பி ஷிவ்பால் யாதவுக்கும், அகிலேஷ் யாதவுக்கு பிரச்னையாக வெடித்தது. இதற்கிடையே சமாஜ்வாதி கட்சி தலைவர்கள் நில அபகரிப்பில் ஈடுபடுவதாக கூறி, ஷிவ்பால் யாதவ் பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். மேலும், அவை தொடர்ந்தால் கட்சியில் இருந்து வெளியேறிவிடுவேன் என எச்சரிக்கை விடுத்தார்.

ஷிவ்பால் யாதவ் விலகினால் கட்சி உடையும் என  அகிலேஷ் யாதவை முலாய் சிங் யாதவ்   எச்சரித்தார். பரபரப்பான சூழலில்,  ஷிவ்பால் யாதவுக்கு ஆதரவான அதிகாரிகளையும் அமைச்சர்களையும் அகிலேஷ் யாதவ் மாற்றினார். இதனால், அகிலேஷ் யாதவை கட்சியில் இருந்து நீக்கினார் தந்தை முலாய் சிங் யாதவ்.

இதற்கு பதிலடியாக ஷிவ்பால் யாதவ் கவனித்து வந்த பதவியை பறித்தார் அகிலேஷ் யாதவ்.  சமாஜ்வாதி கட்சியில் அகிலேஷ் யாதவுக்கு பெரும்பாலான நிர்வாகிகளின் ஆதரவு இருந்த காரணத்தில் அக்கட்சியில் அவரது வசம் வந்தது.  அகிலேஷ் யாதவுக்கு எதிராக முலாய் சிங் யாதவ் எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

VS NEWS DESK
Author: VS NEWS DESK

pradeep blr

ಬಿಸಿ ಬಿಸಿ ಸುದ್ದಿ

ಕ್ರಿಕೆಟ್ ಲೈವ್ ಸ್ಕೋರ್

ಚಿನ್ನ ಮತ್ತು ಬೆಳ್ಳಿ ಬೆಲೆಗಳು