கிரிக்கெட்டர் அல்ல.. சவுரவ் கங்குலி மகளின் வயது, படிப்பு, வாழ்க்கை தெரியுமா?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் பி.சிசி.ஐ சேர்மன் சவுரங் கங்குலியின் மகள் கிரிக்கெட்டர் அல்ல. அவரின் சொத்து மதிப்பு தெரியுமா?

சவுரவ் கங்குலி மகள் சொத்து மதிப்பு: இந்திய கிரிக்கெட் அணியின் நாயகனாக வலம் வந்தவர் சவுரங் கங்குலி. அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் பி.சி.சி.ஐ தலைவரான இவரின் மகள் சனா கங்குலி, கிரிக்கெட்டர் அல்ல. இவரின் சொத்து மதிப்பு என்ன? சனா கங்குலி என்ன படித்துள்ளார்? என்ன வேலை பார்க்கிறார்? என்பன உள்ளிட்ட பல்வேறு தகவல்களை இங்கு பார்க்கலாம். இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான சவுரவ் கங்குலி அதிரடி ஆட்டக்காரர் ஆக அறியப்படுகிறார். இவரின் தலைமையில் இந்திய அணி மகத்தான வெற்றிகளை பதிவு செய்தது.

சவுரவ் கங்குலி மகள் சனா

இந்திய கிரிக்கெட் அணியின் மகத்தான ஆளுமையான சவுரவ் கங்குலி 1996 ஆம் ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தில் அறமுகமானார். அப்போது இவரை ரசிகர்கள் தாதா என்றும் பிரின்ஸ் ஆஃப் கொல்கத்தா என்றும் அழைத்தனர்.
வங்க மொழியில் தாதா என்ற சொல்லுக்கு மூத்த சகோதரன் எனப் பொருள் ஆகும். கிரிக்கெட்டில் பல சாதனைகள் படைத்த சவுரங் கங்குலி, டோனா என்ற கிளாசிக்கல் டான்சரை திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு 2001ல் சனா கங்குலி பிறந்தார்.

பொருளாதாரத்தில் பட்டம்

இவருக்கு தற்போது 24 வயது ஆகிறது. சனா நவ.3ஆம் தேதி பிறந்தார். கொல்கத்தாவில் பள்ளி படிப்பை முடித்த சனா, லண்டன் பல்கலைக்கழகத்தில் கல்லூரி படிப்பை முடித்தார்.
இந்நிலையில், பொருளாதாரத்தில் பட்டம் பெற்றுள்ள சனா கங்குலி, எம்.என்.சி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். ஹெச்.எஸ்.பி.சி, கே.பி.எம்.ஜி, கோல்டுமேன் சாக்ஸ், பார்கிளேஸ் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ உள்ளிட்ட நிறுவனங்களில் பணிபுரிந்துள்ளார்.

ஆண்டு சம்பளம்

சவுரவ் கங்குலியின் மகள் சனா, ஆண்டுக்கு ரூ.30 லட்சம் வரை சம்பளமாக சம்பாதிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இது தவிர சனா டெலாய்ட் நிறுவனத்திலும் பணிபுரிந்துள்ளார். அங்கு இன்டர்ன்ஷிப் பேக்கேஜ்கள் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை பெற்றுள்ளார் என்றும் கூறப்படுகிறது. மேலும், சனா கங்குலியின் நிகர சொத்து மதிப்பு ரூ.1 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

சவுரவ் கங்குலி

இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் இன்றளவும் கொண்டாடப்படும் சவுரவ் கங்குலி, 113 டெஸ்ட் மற்றும் 311 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்டில் 7,212 ரன்களும், ஒருநாள் போட்டிகளில் 11,363 ரன்களும் எடுத்துள்ளார்.
இவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தனது கடைசி சர்வதேச டெஸ்ட் போட்டியிலும், பாகிஸ்தானுக்கு எதிராக தனது கடைசி ஒருநாள் போட்டியிலும் ஆடியிருந்தார். இவர் ஒருநாள் போட்டிகளில் 22 சதங்களும், டெஸ்ட் போட்டிகளில் 16 சதங்களும் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

VS NEWS DESK
Author: VS NEWS DESK

pradeep blr

ಬಿಸಿ ಬಿಸಿ ಸುದ್ದಿ

ಕ್ರಿಕೆಟ್ ಲೈವ್ ಸ್ಕೋರ್

ಚಿನ್ನ ಮತ್ತು ಬೆಳ್ಳಿ ಬೆಲೆಗಳು