விதை போட்ட கருணாநிதி… பொங்கல் பரிசு தொகுப்பின் கதை இதுதான்!

Pongal Gift Hamper : பொங்கல் பண்டிகையை அனைத்து தரப்பு மக்களும் கொண்டாடும் வகையில், அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஒரு கிலோ பச்சரிசி, முழுக்கரும்பு, சர்க்கரை அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது.

உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களால் ஆண்டுதோறும் பொங்கள் திருநாள் சிறப்பாக கொண்டாட்டப்பட்டு வருகிறது. ஜனவரி 14ஆம் தேதி முதல் ஜனவரி 17ஆம் தேதி வரை பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஜனவரி 14ஆம் தேதி போகி, ஜனவரி 15ஆம் தேதி தைப் பொங்கல், ஜனவரி 16ஆம் தேதி மாட்டுப் பொங்கல், ஜனவரி 17ஆம் தேதி உழவர் திருநாள் கொண்டாடப்படுகிறது. இந்த பொங்கல் பண்டிகையை அனைத்து தரப்பு மக்களும் கொண்டாடும் வகையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை, கரும்பு அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. மேலும், ரூ.500 முதல் ரூ.2500 வரை பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில், பொங்கல் தொகுப்பு திட்டத்தை குறித்து விரிவாக தகவலை பார்ப்போம்.

கருணாநிதி துவங்கி வைத்த பொங்கல் பரிசு தொகுப்பு

கருணாநிதி ஆட்சியில் கடந்த 2009ஆம் ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பு திட்டம் துவங்கப்பட்டது. அப்போது அரைகிலோ பச்சரிசி, அரைகிலோ வெல்லம், முந்திரி, உலர் திராட்சை வழங்கப்பட்டது. இதன்பிறகு 2010, 2011 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து கருணாநிதி ஆட்சி காலத்தில் வழங்கப்பட்டது. இதன்பிறகு 2011 தேர்தலுக்கு பிறகு அதிமுக ஆட்சியில் அமைந்தது.

நிதி நெருக்கடியால் 2012ஆம் ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படவில்லை. இதனால் மக்கள் அதிருப்தி அடைந்ததை அடுத்து, மீண்டும் 2013ஆம் ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. இதில் சில அதிரடி விஷயங்களும் கொண்டு வரப்பட்டது.

அதாவது பொங்கல் பரிசு தொகுப்பு பைகளுடன் 100 ரூபாயும் ரேஷன் அடைத்தாரர்களுக்கு வழங்கினார்.  மேலும், ஒரு கிலோ பச்சரிசி, முழுக் கரும்பும் வழங்கப்பட்டது. இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த தொகுப்பு 2013,2014ஆம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக அதிமுக தலைமையிலான அரசு வழங்கியது. அதன்பிறகு 2015ஆம் ஆண்டு நிறுத்தப்பட்ட நிலையில், எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.

அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து சென்ற ஜெயாலலிதா

இதனை அடுத்து, 2016ஆம் ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. இதன்பிறகு 2016ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் 2வது முறையாக அதிமுக ஆட்சியை பிடித்தது. இதன்பிறகு சில மாதங்களில் ஜெயலலிதா காலமான நிலையில், ஓ.பன்னீர்செல்வம் முதல்வராகவும், எடப்பாடி பழனிசாமி துணை முதல்வராகவும் இருந்தார்.

அந்த நேரத்தில் 2017ஆம் ஆண்டு ஆண்டு பொங்கல் தொகுப்பு வழங்கினார். இதன்பிறகு எடப்பாடி தலைமையிலும் 2018ல் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது. 2019ல் அதிமுக பொங்கல் தொகுப்புடன் ரூ.1,000 ரொக்கமாக வழங்கி மக்கள் குஷிப்படுத்தியது. இதன்பிறகு 2020, 2021ல் வழங்கப்பட்டது.

இதில் 2021ல் யாரும் எதிர்பார்காத வகையில், பொங்கல் தொகுப்புடன் ரூ.2500 ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கினார்.  அதன்பின்பு,  திமுக ஆட்சி அமைந்த பிறகு முதல்வர் ஸ்டாலின் 2022 2023, 2024ஆம் ஆண்டுகளில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1,000 வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

VS NEWS DESK
Author: VS NEWS DESK

pradeep blr

ಬಿಸಿ ಬಿಸಿ ಸುದ್ದಿ

ಕ್ರಿಕೆಟ್ ಲೈವ್ ಸ್ಕೋರ್

ಚಿನ್ನ ಮತ್ತು ಬೆಳ್ಳಿ ಬೆಲೆಗಳು