மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்துள்ளது. ஒரு டாலருக்கு நிகரான மதிப்பு 14 காசுகள் சரிந்து முதல் முறையாக 86 ரூபாயாக வீழ்ச்சி அடைந்தது. அமெரிக்க டாலர் வலுவாக இருப்பதும், அந்நிய முதலீடுகள் தொடர்ச்சியாக வெளியேறுவதால் வீழ்ச்சி அடைந்துள்ளது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 0.3%, தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 0.4% சரிந்துள்ளன. பெரிய, சிறு, நடுத்தர நிறுவனங்களின் பங்குகள் விலை சரிவால் முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் ரூ.5.5 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. 260 நிறுவனங்களின் பங்கு விலை, ஓராண்டின் குறைந்தபட்ச நிலைக்கு சரிந்துவிட்டன. அதேநேரத்தில் சிறு நிறுவனங்களின் பங்குகள் 2%, நடுத்தர நிறுவனங்களின் பங்குகள் 2.4% வீழ்ச்சியடைந்துள்ளன.
கட்டுமான நிறுவன குறியீட்டு எண் மற்றும் பொதுத்துறை வங்கி குறியீட்டு எண்கள் தலா 2.7% சரிவடைந்துள்ளன. மருத்துவமனைகள் மற்றும் மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் பங்குகளும் 2% குறைந்துள்ளன. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் குறியீட்டு எண் மட்டுமே 3.4% அளவுக்கு உயர்ந்துள்ளது. ஐ.டி. தவிர பிற துறை நிறுவன பங்குகள் விலை சரிந்ததால் முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் ரூ.5.5 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. 3 நாட்களில் பங்கு விலைகள் தொடர் சரிவால் முதலீட்டாளர்களுக்கு ரூ.12 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது
Author: VS NEWS DESK
pradeep blr