சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்த அதிமுக.. எடப்பாடி பழனிசாமி சொன்ன காரணம்!

AIADMK Walkout From Assembly | 2025 – 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டமன்றத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்ய தொடங்கிய நிலையில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவினர் அதிரடியாக வெளிநடப்பு செய்தனர்.

சென்னை, மார்ச் 14 : சட்டமன்றத்தில் இன்று (மார்ச் 14, 2025) பட்ஜெட் உரை தொடங்கிய நிலையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர். அதன் பின், சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, தாங்கள் சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தது குறித்து விளக்கம் அளித்துள்ளார். இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி கூறியது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பட்ஜெட் உரை தொடங்கியதுமே வெளிநடப்பு செய்த அதிமுகவினர்

தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2025- 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து வருகிறார். இதற்காக திமுக, அதிமுக உள்ளிட்டப் அரசியல் கட்சி தலைவர்கள் சட்டமன்றத்திற்கு வருகை புரிந்த நிலையில், அமைச்சர் தங்கம் தென்னரசு உரையை தொடங்கினார். அமைச்சர் உரையை தொடங்கிய ஒரு சில நிமிடங்களிலேயே எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர்.

சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி

அப்போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சட்டப்பேரவையில் இருந்து வெளியேறியதற்கான சில காரணங்களை கூறினார். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, அன்றைக்கு எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் சட்டசபை தலைவராக இருந்த தனபாலை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று சொன்னபோது 14 நாட்கள் கழித்து அந்த தீர்மானத்தை நாங்கள் ஏற்றுக்கொண்டோம். இது வரலாறு, இதனை யாரும் மறுக்க முடியாது என்று கூறினார்.

கோரிக்கைகளை ஏற்காததால் வெளிநடப்பு – எடப்பாடி பழனிசாமி விளக்கம்

தொடர்ந்து பேசிய அவர், நாங்கள் சட்டமன்ற தலைவர் அப்பாவுவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று திர்மானத்தை முன்வைத்தோம். ஆனால், அவர்கள் அந்த தீர்மானத்தை எடுத்துக்கொள்ளவில்லை. எனவே, அதனை கண்டித்தும், மதுபான ஊழலை கண்டித்தும் திமுக அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி தாங்கள் சட்டமன்றத்தில் இருந்து வெளியேறியதாக அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ಬಿಸಿ ಬಿಸಿ ಸುದ್ದಿ

ಕ್ರಿಕೆಟ್ ಲೈವ್ ಸ್ಕೋರ್

ಚಿನ್ನ ಮತ್ತು ಬೆಳ್ಳಿ ಬೆಲೆಗಳು