சென்னை: பிரபல ஐடி நிறுவனமான ஜோஹோவில் சென்னையில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனே விண்ணப்பம் செய்யலாம்.
தமிழ்நாட்டில் பல்வேறு ஐடி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் ஒன்று தான் ஜோஹோ. இந்த நிறுவனம் சென்னை, மதுரை, திருநெல்வேலி, தென்காசி உள்பட பல இடங்களில் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் சென்னையில் செயல்பட்டு வரும் ஜோஹோ நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
தற்போதைய அறிவிப்பின்படி ஜோஹோவில் குவாலிட்டி அனலிஸ்ட் (Quality Analyst) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். விண்ணப்பம் செய்வோர் இந்த பிரிவில் குறைந்தபட்சம் 4 ஆண்டும், அதிகபட்சமாக 7 ஆண்டும் பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். இந்த தகுதி உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
பணிக்கு தேர்வாகும் நபர்கள் புராடெக்ட் குவாலிட்டியை உறுதி செய்யும் வகையில் டிசைன், டெவலப் மற்றும் எக்ஸிக்கியூட் டெஸ்ட் கேசஸ், ஸ்கிரிப்ட் மற்றும் பிளான்ஸ் பணியை செய்ய வேண்டி இருக்கும். மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டட் டெஸ்ட்டிங் முறையில் bugs, defects கண்டுபிடித்து சரிசெய்யும் பணியை செய்ய வேண்டி இருக்கும். அதேபோல் குறிப்பிட்ட டைம் பீரியடில் சாப்ட்வேர் டிபெக்ட்ஸ்களை கண்டுபிடித்து ரிப்போர்ட் செய்ய வேண்டி இருக்கும். அதேபோல் ஆட்டோமேஷன் லைப்ரேரி மற்றும் ஃப்ரேம்வொர்க் பணியை செய்ய வேண்டி இருக்கும்.
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கு தேர்வு செய்யப்படுபவர் சென்னை அலுவலகத்தில் நியமனம் செய்யப்படுவர். அதேபோல் மாத சம்பளம் குறித்த விபரம் எதுவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை.அதுமட்டுமின்றி பணி அனுபவம் திறமையை பொறுத்து சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்பட உள்ளது. கடைசி கட்ட இண்டர்வியூவில் சம்பளம் பற்றிய விபரம் தெரிவிக்கப்படலாம்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஜேஹோவின் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று ஆன்லைனில் விண்ணப்பம் செய்யலாம். இந்த பணி அறிவிப்பு வந்து ஒருவாரம் கடந்து விட்டது. விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி குறிப்பிடவில்லை என்பதால் முடிந்தவரை உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது. ஏனென்றால் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப முறை காலாவதியாகலாம்.