இல்லற உறவுக்கு மறுத்த மனைவி.. கணவன் மீது போட்ட பழி! வழக்கு போட்டவருக்கு ஹைகோர்ட் வைத்த குட்டு

பாட்னா: கணவருடன் பாலியல் உறவில் ஈடுபாடு காட்டாத பெண், தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக பொய்யாக தொடர்ந்த பாலியல் வழக்கை பாட்னா ஹைகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. இது குறித்த விவரம் வருமாறு:-

உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர் பிரபஞ்சல் சுக்லா. இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு மீஷா என்ற இளம்பெண்ணை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த சில ஆண்டுகளில் தன்னிடம் வரதட்சணை கேட்டு கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் கொடுமைப்படுத்துவதாக கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இயற்கைக்கு மாறாக உறவில் ஈடுபடுமாறு கட்டாயப்படுத்துவதாகவும், ஆபாச படங்கள் பார்க்க வற்புறுத்துவதாகவும் கணவர் மீது இளம்பெண் குற்றம் சாட்டியிருந்தார்.

மேலும் தன்னை தனியாக விட்டுவிட்டு பிரஞ்சல் சுக்லா சிங்கப்பூர் சென்றுவிட்டதாகவும் கூறியிருந்தார். இது தொடர்பான வழக்கு உத்தர பிரதேச மாநிலம் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. நீதிபதி அனிஷ் குமார் குப்தா முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. விசார்ணையில், பிரபஞ்சல் சுக்லா மீது சுமதப்பட்ட வரதட்சணை குற்றச்சாட்டுக்கள் பொய்யானது என கண்டறியப்பட்டது.

திருமணத்திற்கு கூட பிரபஞ்சல் குடும்பத்தினர் வரதட்சணையாக பணம் எதுவும் கேட்கவில்லை என்றும் விசாரணையில் தெரியவந்தது. பிறகு ஏன் கணவர் மீது மனைவி புகார் கொடுக்க வேண்டும்.. இருவருக்கும் இடையே உள்ள பிரச்சினை என்ன என்று விசாரித்ததில் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. அதாவது, கணவன் – மனைவி இடையே உள்ள தாம்பத்திய உறவில் சிக்கல் இருந்ததே பிரச்சினைக்கான காரணம் என தெரியவந்துள்ளது.

கணவருடன் மனைவி மீஷா பாலியல் உறவில் ஈடுபட தொடர்ந்து மறுத்து வந்துள்ளார். இதனால் ஏற்பட்ட பிரச்சினையே வழக்கு தொடர காரணம் என்பதால், பிரஞ்சல் சுக்லா மீதான வரதட்சணை புகார் ரத்து செய்யப்படுவதாக நீதிபதி உத்தரவிட்டார். மேலும் தனது உத்தரவில் நீதிபதி கூறுகையில், “பிரஞ்சல் சுக்லா மீதான வழக்கு மற்றும் அவரது மனைவி அளித்த வாக்கு மூலம் இரண்டையும் ஆய்வு செய்யும் போது ஒரு விஷயம் தெரிகிறது.

இருவருக்கும் இடையே பிர்ச்சினை எழுந்தால் அது வரதட்சணைக்காக அல்ல என்பதும் எதிர்தரப்பு பாலியல் உறவுக்கு மறுத்ததால் நடந்தது என்பதும் உறுதியாகிறது. எனவே, வரதட்சணை பொய்யான புகாராகும். இருவருக்கும் இல்லற வாழ்வில் சிக்கல் இருந்தது தெரிய வருகிறது. இந்த பிர்ச்சினை அடிப்படையில் எதிர்தரப்பு அளித்த புகாரின் படி இவ்வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒழுக்கமான சமூகத்தில் ஒருவர் தனது சொந்த மனைவி அல்லது கணவரை தவிர இல்லற சுகத்திற்கு வேறு எங்கும் போக முடியாது” என்றார்.

ಬಿಸಿ ಬಿಸಿ ಸುದ್ದಿ

ಕ್ರಿಕೆಟ್ ಲೈವ್ ಸ್ಕೋರ್

ಚಿನ್ನ ಮತ್ತು ಬೆಳ್ಳಿ ಬೆಲೆಗಳು