கோவை: மேற்கு புறவழிச்சாலை திட்டம், எல் அண்ட் ஆறு வழிச்சாலை விரிவாக்கம் இந்த இரண்டு திட்டமுமே கோவை மக்களுக்கு வரப் பிரசாதமாக அமையவுள்ளது. கோவை மாதம்பட்டி அருகே மேற்கு புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இத்திட்டத்தின் முதல்கட்ட பணியை அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் மாநில நெடுஞ்சாலைத் துறை முடிக்கவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை நகர்ப் பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவை நகருக்கு வெளியே புறநகர்ப் பகுதிகளில் சுற்றுச் சாலை அமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து, போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காணும் வகையில் 2009 இல் கோவை – பாலக்காடு சாலையில் மைல்கல்லில் இருந்து நரசிம்மநாயக்கன் பாளையம் வரை 32 கிலோ மீட்டர் தூரம் வரை மேற்குப் புறவழிச் சாலை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் மேற்குப் புறவழிச் சாலை திட்டம் அதிதீவிரமாக நடைபெற்று வருகிறது. பதினைந்து வருவாய் கிராமங்கள் வழியாக இந்த சாலை அமையவுள்ளது. இச்சாலையில் தலா 7 மீட்டர் அகலத்துக்கு ஓடுதளமும் அமைக்கப்படவுள்ளது. இந்த வழியாக மெட்ரோ ரயில் திட்டம் எதிர்காலத்தில் இயக்க வாய்ப்பிருந்தால் மேற்குப் புறவழிச் சாலை பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக ஐந்து மீட்டர் அகலத்திற்கு மையத் தடுப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மதுக்கரை, மைல்கல்லில் இருந்து மாதம்பட்டி வரை 11.80 கிலோ மீட்டருக்கு சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன .மைல்கல் முதல் மாதம்பட்டி வரை இரண்டு இடங்களில் மேம்பாலம், பதிமூன்று இடங்களில் சிறிய பாலங்கள் கட்டப்படுகின்றன. இதில், சிறிய பாலங்கள் கட்டும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.
மூன்று கட்டமாக நடைபெறவுள்ள இப்பணிகளுக்கு முதல்கட்டமாக 200 கோடி ரூபாய் மதிப்பில் நடைபாதையுடன் கூடிய சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து, மாதம்பட்டி முதல் கணுவாய் வரை 12.10 கிலோ மீட்டர் தூரத்திற்கு இரண்டாம் கட்ட சாலையும், மூன்றாம் கட்டமாக நரசிம்மநாயக்கன் பாளையம் வரை 8.52 கிலோ மீட்டர் தொலைவுக்கும் சாலை அமைக்கப்படவுள்ளது.
இரண்டாம் கட்டமாக நிலம் கையகப்படுத்தும் பணிகளும் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளன. இறுதிக்கட்ட பணிக்காக நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகள் தற்போது தொடங்கியுள்ளது. இரண்டு தசாப்தங்கள் முன்பு மேற்கு புறவழிச் சாலை திட்டம் உருவாக்கப்பட்டது. இப்பணிகள் தற்போது முடிவுக்கு வரவுள்ளன.
இதைத்தொடர்ந்து, மற்றொரு சாலை மாநில நெடுஞ்சாலைத் துறையின் தேசிய நெடுஞ்சாலைப் பிரிவு சார்பாக கோவையில் உள்ள முக்கியமான எஸ் அண்ட் டி சாலை அகலப்படுத்தப்பட உள்ளது. தென்னிந்தியாவிலேயே பிஓடி அடிப்படையில் தனியார் மயமாக்கல் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்ட முதல் சாலை இதுவாகும். இந்த பைபாஸ் சாலையை நீலாம்பூரில் இருந்து மதுக்கரை வரை 27.2 கிமீ தூரம் ஆறு வழிச் சாலையாக விரிவுபடுத்தப்பட உள்ளது.
இதுகுறித்து சாலைப் போக்குவரத்து குறுகலான எல் அண்ட் டி மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்திற்கு தமிழ்நாடு அரச, திட்டத்தை அனுப்பியுள்ளது. இந்தப் பகுதியில் அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்பட்டு வரும் நிலையில், இதனைத் தடுக்க இந்த சாலையை விரிவுபடுத்த வேண்டியது அவசியமாகவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இப்பகுதியில் சாலை விபத்தில் 120 வாகன ஓட்டிகள் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து, திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தீவி ரப்படுத்தப்பட்டுள்ளன. நீலாம்பூரில் இருந்து மதுக்கரை வரை 27.2 கிலோமீட்டர் தொலைவு ஆறு வழிச் சாலையாக விரிவுபடுத்தப்பட்டால் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறையும். அதேபோல, சாலை விபத்துகளும் குறையும் வாய்ப்புள்ளன.
மேலும், தொப்பூர் கணவாய் பகுதியில் உயர்மட்ட சாலை அமைக்கும் முடிவை தமிழ்நாடு அரசும் தேசிய நெடுஞ்சாலைத் துறை வாரியமும் கையில் எடுத்துள்ளது. தருமபுரி மாவட்டம், தொப்பூரில் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கில் விபத்துகள் ஏற்படுவது வழக்கம். 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தருமபுரி மாவட்ட தொப்பூரில் கோர விபத்து ஏற்பட்டது.
சரக்கு லாரி ஒன்று டோல் அருகே நின்று கொண்டிருந்த 13 வாகனங்கள் மீது சரசரவென்று மோதிய விபத்தில் கொடூர விபத்து நேர்ந்தது. இதில், சம்பவ இடத்திலேயே 7 பேர் உயிரிழந்தனர். 40 பேர் காயமடைந்தனர். 11 கார்கள் சேதமடைந்தன. தொப்பூரில் நடந்த விபத்துகளில் இது மிகவும் மோசமான விபத்தாகும்.
இச்சம்பவத்தையடுத்து, ஒவ்வொரு பகுதியிலும் சாலை விரிவாக்கம் தீவிரமாகியுள்ளன. கோவையை பொறுத்தவரை மேற்கு புறவழிச்சாலை நிட்டம், எல் அண்ட் டி ஆறு வழிச்சாலை விரிவாக்கம் என இவ்விரண்டும் நிறைவேறினால் கோவை ஒட்டுமொத்தமாக மாற்றிய திட்டமாக அமைய வாய்ப்புள்ளது.
இதனிடையே, கேரள மாநிலத்தின் பாலக்காடு, திருச்சூர், கொச்சி ஆகிய நகரங்களுடன் தமிழகத்தின் கோவையை இணைக்கும் சாலையாக தேசிய நெடுஞ்சாலை எண் 544 உள்ளது. இந்த சாலையானது ஒரு சில பகுதிகளில் 2 வழிச் சாலையாகவும், 4 வழிச் சாலையாகவும், 6 வழிச் சாலையாகவும் உள்ளது. வளர்ந்து வரும் போக்குவரத்து நெரிசல்களை கருத்தில் கொண்டு அனைந்து இடங்களிலும் 6 வழிச் சாலையாக மாற்ற வேண்டும்.குறிப்பாக, கோவை நீலாம்பூரில் இருந்து மதுக்கரை வரையிலான 26 கிலோ மீட்டர் சாலையானது தற்போது 2 வழிச்சாலையாக உள்ளதை 4 வழிச்சாலையாக உடனடியாக மாற்ற ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருப்பூர் எம்பி சுப்பராயன் ஒன்றிய சாலை போக்குவரத்துறை அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.