Search
Close this search box.

வேளச்சேரி பாலத்தில் காரை எடுக்கலாம்..வெதர்மேன் சொன்ன தகவல்! ஆனாலும் மக்கள் கேட்கலையே! போன வருஷ பயம்?

சென்னை: சென்னையில் இன்று அதி கனமழை பெய்ய வாய்ப்பு குறைவு என்பதால் வேளச்சேரி மேம்பாலத்தில் நிறுத்தப்பட்டு இருந்த கார்களை பொதுமக்கள் வீடுகளுக்கு எடுத்துச் செல்லலாம் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் கனமழை அச்சம் காரணமாக நிறுத்தப்பட்ட கார்கள் அப்படியே இருக்கிறது. ஒருவேளை மழை பெய்தால் என்ன செய்வது என்கின்றனர் கார் உரிமையாளர்கள்.

Backfill Promotion
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி இருக்கும் நிலையில் நேற்று முன்தினம் முதல் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை மாநகர், புறநகர் பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது

இந்நிலையில் நேற்று முதல் சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை புறநகர் பகுதிகளான மேடவாக்கம், பள்ளிக்கரணை, குரோம்பேட்டை ,வேளச்சேரி, நெற்குன்றம், தாம்பரம் ஆகிய பகுதிகளில் பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

இதே போல சென்னையின் அண்ணா சாலை, தி நகர், சைதாப்பேட்டை, கிண்டி, திருவல்லிக்கேணி, அசோக் நகர், ஜாஃபர்கான் பேட்டை, சேப்பாக்கம், ராயப்பேட்டை, எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பலத்த காற்றுடன் பெய்து வரும் மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. அதே நேரத்தில் மழை நீரை வெளியேற்றுவதற்காக சென்னை மாநகராட்சி ஊழியர்களும் தயார் நிலையில் இருக்கின்றனர்.

வேளச்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் முழங்கால் அளவு சாலைகளில் வெள்ளம் தேங்கி இருக்கும் நிலையில் வாகன போக்குவரத்து முடங்கி இருக்கிறது. இதை அடுத்து தேங்கி இருக்கும் மழை நீரை வெளியேற்றும் பணியானது நடைபெற்றது. பல இடங்களில் தண்ணீர் வெளியேறிய நிலையில், சென்னயில் சில இடங்களில் இன்னும் தண்ணீர் தேங்கியிருப்பதாக மக்கள் புகார் கூறுகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக மழை வெள்ள அச்சம் காரணமாக வேளச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வேளச்சேரி ரயில் நிலையம் எதிரே இருக்கும் மேம்பாலத்தில் தங்கள் கார்களை நிறுத்தினர்.

கடந்த வருடம் ஏராளமான கார்கள் பழுதானதால் ஆயிரக்கணக்கில் செலவு செய்ய வேண்டி இருந்தது. இந்த நிலையில் மழை எச்சரிக்கைக்கு இரண்டு நாட்கள் முன்பதாகவே வேளச்சேரி மேம்பாலத்தில் கார்களை அதன் உரிமையாளர்கள் நிறுத்தினர். இதனால் இருபுறமும் நூற்றுக்கணக்கான கார்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதை அடுத்து போலீசார் அந்த கார்களுக்கு அபராதம் விதித்தனர். இது கடும் கண்டனங்களை பெற்ற நிலையில் அது வாபஸ் பெறப்பட்டது.

இந்நிலையில் வரும் நாட்களில் மழை குறித்து கணித்த தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்,” காற்றழுத்த தாழ்வு நிலை சென்னையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும், காற்று கடக்கும் பகுதிக்கு வடக்கே இருக்கும் என்பதால் சென்னை மக்கள் சற்று நிம்மதியாக இருக்கலாம் எனவும், சென்னையில் சாதாரண மழை பெய்யலாம்! சென்னையில் வரும், 18-20 தேதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலத்தில் நகரும் போது,​​சாதாரணமாக சமாளிக்கக்கூடிய மழை இருக்கும். எனவே மேம்பாலங்களில் நிறுத்தப்பட்டுள்ள வாகனத்தை வீட்டிற்கு கொண்டு செல்லலாம்” என கூறியிருந்தார்.

இதற்கு முன்னர் பிரதீப் ஜான் கணித்த பெரும்பாலான மழைக் கணிப்புகள் சரியானதாகவே இருந்தது. தற்போது அவர் மழை குறைவாகவே இருக்கும் கார்களை எடுத்துச் செல்லலாம் என பதிவிட்டு இருந்தாலும் பொதுமக்கள் அதற்கு தயாராக இல்லை என்பது தற்போது மக்களின் செயலில் இருந்து பெரிய வருகிறது.வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் இன்னும் அப்படியே இருக்கின்றன. சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு கார்கள், இருசக்கர வாகனங்கள் வேளச்சேரி மேம்பாலத்தில் அப்படியே நிறுத்தப்பட்டு இருக்கின்றன. கீழ்ப் பாலம், மேல்பாலம் என எங்கு பார்த்தாலும் கார்களாகவே காட்சி அளிக்கிறது. கடந்த ஆண்டு ஏற்பட்ட பாதிப்பு அச்சத்தில் இருந்து மக்கள் இன்னும் மீளவில்லை என்பதனையே இது காட்டுகிறது.

VS NEWS DESK
Author: VS NEWS DESK

pradeep blr