சென்னை: சென்னை ஈசிஆர் பீச்சில் தினமும் காலை நடக்கும் சம்பவம் ஒன்றை பற்றிய அதிர்ச்சி வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் ஆக வெளியாகி உள்ளது.
தினேஷ் என்பவர் இந்த வீடியோவை வெளியிட்டு உள்ளார். அதில் ஈசிஆர் பேச்சில் ஆங்காங்கே குழிகள் தோண்டப்பட்டு உள்ளன. இதை பார்த்து இந்த குழிகள் ஏன் இருக்கிறது என்று தெரியவில்லை என்று கூறி உள்ளார்.அதை தொடர்ந்து.. அவர்.. இந்த குழிகளில்தான் வந்து மக்கள் பலர் மலம் கழிக்கிறார்கள். திடீரென பலர் இங்கே வருகிறார்கள். வந்து மலம் கழிக்கிறார்கள் என்று குறிப்பிட்டு உள்ளார். அவர் குறிப்பிடும் போதே அங்கே வந்து பலர் மலம் கழிக்கும் காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.
சென்னையில் உள்ள பீச்களை முன்னேற்ற… உருமாற்றம் செய்ய பல பணிகள் நடந்து வருகின்றன. சென்னை மற்றும் அதன் விரிவாக்கப்பட்ட பகுதிகள் என்று மொத்தம் 52 கிமீ கடற்கரையில் புதிதாக கடற்கரைகள் கொண்டு வரப்பட உள்ளன. இந்த பகுதி சுற்றுச்சூழலுக்கு உகந்த உள்கட்டமைப்புடன் கூடிய 20 கடற்கரைகளைப் பெற வாய்ப்புள்ளது; இப்படிப்பட்ட நிலையில்தான் ஈசிஆர் பீச்சில் இந்த கொடுமை நடந்து கொண்டு இருக்கிறது.
சென்னை பெருநகரப் பகுதிக்கான மூன்றாவது மாஸ்டர் பிளான் (2027-2046)க்கான தொலைநோக்கு ஆவணம் தயாரிப்பதற்கு முன்னதாகத் தொகுக்கப்பட்ட தரவுகளின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
சென்னை மாஸ்டர்பிளான்: சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) சென்னை பெருநகரப் பகுதிக்கான (சிஎம்ஏ) மூன்றாவது மாஸ்டர் பிளானுக்காக (டிஎம்பி) பணிகளை தொடங்கி உள்ளது. நவம்பர் மாதத்திற்குள் 15 ஆய்வுகளை நடத்தி முடிக்க முடிவு செய்துள்ளது.
மாஸ்டர் பிளான் என்பது சென்னைக்கான வளர்ச்சி திட்டம் ஆகும். அடுத்த ஒரு வருடத்திற்கு சென்னையில் என்ன மாதிரியான மாற்றங்களை செய்ய வேண்டும். சென்னையை எப்படி முன்னேற்ற வேண்டும் என்பது தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்படும். இந்த மாஸ்டர் பிளானில்தான் முக்கியமான முடிவுகள் எடுக்கப்படும். இந்த நிலையில்தான், 1,189 சதுர கிலோ மீட்டர் தூரத்திற்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுவதற்கான பணிகளை சென்னை மாநகராட்சி தொடங்கி உள்ளது.
சென்னை பெருநகர மாநகராட்சியின் வரம்பை 1,189 சதுர கிலோ மீட்டரில் இருந்து 5,904 சதுர கி.மீ. ஆகி விரிவுபடுத்துவதற்கான உத்தரவை மாநில அரசு முன்பு வெளியிட்டது. இந்த நிலையில் தற்போதுள்ள 1,189 சதுர கி.மீ.க்கு மூன்றாவது மாஸ்டர் பிளான் தயாரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள பகுதிகளுக்கு, திருமழிசை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மீஞ்சூர் மற்றும் திருவள்ளூர் போன்ற செயற்கைக்கோள் நகரங்கள்/வளர்ச்சி மையங்களுக்கு மாஸ்டர் பிளானுக்கு பதிலாக, ரிஜினல் வளர்ச்சி திட்டம் தயாரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
கடற்கரை: இந்த நிலையில்தான் சென்னை மற்றும் அதன் விரிவாக்கப்பட்ட பகுதிகள் என்று மொத்தம் 52 கிமீ கடற்கரையில் புதிதாக கடற்கரைகள் கொண்டு வரப்பட உள்ளன. இந்த பகுதி சுற்றுச்சூழலுக்கு உகந்த உள்கட்டமைப்புடன் கூடிய 20 கடற்கரைகளைப் பெற வாய்ப்புள்ளது;
தொலைநோக்கு ஆவணம் தயாரிப்பதற்கான துறைசார் கூட்டத்தில், பெருநகர சென்னை மாநகராட்சி (ஜிசிசி) மற்றும் பிற சிவில் ஏஜென்சிகளின் அதிகாரிகள் சுற்றுச்சூழல், சுற்றுச்சூழல், நகர்ப்புற வளர்ச்சி, இயற்கை வளங்கள் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் சவால்கள் குறித்த குழு விவாதங்களில் பங்கேற்றனர். .
இதில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில், ஜிசிசி போன்ற குடிமை அமைப்புகள் பல்வேறு கடற்கரையை அழகுபடுத்தும் திட்டங்களை செயல்படுத்துவதில் சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையத்துடன் (சிஎம்டிஏ) ஒருங்கிணைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மெரினா கடற்கரையை அழகுபடுத்தும் திட்டம் பல ஆண்டுகளுக்கு முன்பு GCC ஆல் செயல்படுத்தப்பட்ட நிலையில் 2024 ஆம் ஆண்டில் பல மண்டலங்களில் கடற்கரைகளுக்கான திட்டங்கள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதில்தான் புதிதாக பல கடற்கரைகள் தொடங்கப்பட உள்ளன. எண்ணூர், பெசன்ட் நகர், கோவளம், மெரினா ஆகிய பகுதிகளுக்கு கடலோர மேம்பாட்டுத் திட்டம் தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. உலகத்தரம் வாய்ந்த பார்வையாளர் வசதிகளை மேம்படுத்த கடற்கரைகளுக்கு அருகில் உள்ள அரசு நிலங்கள் கண்டறியப்படும் அங்கே புதிய வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
என்ன நோக்கம்?: மூன்றாவது மாஸ்டர் பிளான் திட்டத்தில் பொருளாதாரம் முக்கிய இடத்தைப் பிடிக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதிக கவனம் செலுத்த வேண்டிய பகுதிகள் மற்றும் முதலீட்டு மண்டலங்களை அடையாளம் காண்பதில் CMDA கவனம் செலுத்துகிறது. வணிகத் துறைகளில் மட்டுமல்ல, பல்வேறு தொழில்களிலும் வசதிகளை மேம்படுத்தும் திட்டத்தை அரசு கையில் எடுத்துள்ளது. இதற்காக, இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹ்யூமன் செட்டில்மென்ட்ஸ் (IIHS) அமைப்புடன் ஆலோசனைகளை மேற்கொள்ள உள்ளது.