விஜய்யை விமர்சித்த நெப்போலியன்.. ஒரு பெரிய மனுஷன் செய்ற வேலையா இது? கண்டித்த பிரபலம்!

சென்னை: கோட் படத்தில் விஜய் தன் கையில் இருந்த துப்பாக்கியை சிவகார்த்திகேயன் கையில் கொடுத்துவிட்டு சென்றது பெரும் பேசுபொருளானது இதுகுறித்து பேசிய நெப்போலியன் விஜய்யை கடுமையாக விமர்சித்து இருந்தார். இதுகுறித்து பேசிய அந்தணன், அமெரிக்காவில் இருக்கும் அவருக்கு இது தேவையில்லாத வேலை என தெரிவித்துள்ளார்.

வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த கோட் படத்தில்,சிவகார்த்திகேயன் சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அப்போது கிளைமாக்ஸ் காட்சியில், துப்பாக்கியை சிவகார்த்திகேயனிடம் கொடுத்துவிட்டு செல்வார். இந்த காட்சி இணையத்தில் பலராலும் விவாதிக்கப்பட்டது. தனக்கு பின்பு சிவகார்த்திகேயன் தான் என்று சினிமாவை பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும், அடுத்த விஜய் சிவகார்த்திகேயன் தான் என்றும் இணையத்தில் பலவிதமான கருத்துக்கள் பரவியது. மேலும் சிலர் சிவகார்த்திகேயனின் மீது வன்மத்தை கக்கினார்கள்.

நெப்போலியன்: இதுகுறித்து பேசிய, நெப்போலியன் வந்தாரை வாழ வைக்கும் தமிழகத்தின் மத்திய பகுதி திருச்சியிலிருந்து வந்த சிவகார்த்திகேயன், நடிச்சி இவ்வளவு சீக்கிரம் மேலே வந்துள்ளது பாராட்ட வேண்டிய விஷயம், சினிமாவில் ஆரோக்கியமான போட்டியை வைத்துக் கொள்ளவும், இன்றைக்கு சிவகார்த்திகேயன் நடித்த படம் டாப் 5 நடிகர்கள் படத்துக்கு சமமாக உள்ளது.மற்றவர்கள் அதைவிட சிறந்த படத்தை கொடுக்க முயற்சி செய்ய வேண்டும், அதை விட்டுவிட்டு சிவகார்த்திகேயன் மீது பொறாமை படுவது, இழிவாக பேசுவது சரியில்லை என்று மறைமுகமாக விஜய்யை தாக்கி இருந்தார்.

பெரிய மனுஷனுக்கு அழகு: இதுகுறித்து யூடியூபில் பேசிய வலைப்பேச்சு அந்தணன், சிவகார்த்திகேயன் தனது திறமையால் உயர்ந்து வளர்ந்து இருக்கிறார்.அவரை ஏன் விமர்சனம் செய்கிறீர்கள் என்று ஒரு கருத்தை வைக்கிறார். அமெரிக்காவில் இருக்கும் நெப்போலியன், அங்கிருந்து கொண்டு பஞ்சாயத்து செய்து ஒன்னும் ஆகிவிடப்போவதில்லை. நெப்போலியன் என்பவர் பொதுவானவர் அப்படி இருக்கும் போது சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக கருத்தை தெரிவிக்காமலே இருந்து இருக்கலாம்.நெப்போலியனுக்கு என்று தமிழ் சினிமாவில் ஒரு தனி மரியாதை இருக்கிறது. அப்படி இருக்கும் போது, இதுபோன்ற விஷயத்தை கண்டு கொள்ளாமல் இருப்பது தான் ஒரு பெரிய மனுஷனுக்கு அழகு என்ற அந்த பேட்டியில் வலைப்பேச்சு அந்தணன் பேசி உள்ளார்.ஏற்கனவே பஞ்சாயத்து: விஜய் மற்றும் நெப்போலியன் இருவரும் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான போக்கிரி படத்தில் இணைந்து நடித்திருந்தனர். பிரபுதேவா இயக்கிய இந்த படத்தின் படப்பிடிப்பின்போது நெப்போலியன் விஜய் இடையே மோதல் ஏற்பட்டதாகவும் அதன் காரணமாக இருவரும் தற்போது வரை பேசிக்கொள்வதில்லை என்றும் கூறப்படுகிறது.

ಬಿಸಿ ಬಿಸಿ ಸುದ್ದಿ

ಕ್ರಿಕೆಟ್ ಲೈವ್ ಸ್ಕೋರ್

ಚಿನ್ನ ಮತ್ತು ಬೆಳ್ಳಿ ಬೆಲೆಗಳು