திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெறுகிறது. இதனை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் கடற்கரையில் குவிந்துள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் திருச்செந்தூரில் கந்த சஷ்டி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும். இந்த ஆண்டும் இந்த விழாவுக்காக சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30க்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், பிற்பகல் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெற இருக்கிறது. இறுதியாக மாலை 4.30க்கு திருச்செந்தூர் கடற்கரையில் சூரசம்ஹார விழா நடைபெறும். இதனை காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
Author: VS NEWS DESK
pradeep blr