அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் மீண்டும் தேர்வாகியிருக்கும் நிலையில், இந்தியாவில் என்ன மாதிரியான தாக்கத்தை அது ஏற்படுத்தும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
டொனால்ட் டிரம்ப், தனது தேர்தல் பரப்புரையின் போதே அமெரிக்காவிற்குத் தான் முன்னுரிமை என்ற முழக்கத்தை முன்வைத்தார். எனவே, அமெரிக்கப் பொருட்கள் மற்றும் சேவைகளின் இறக்குமதிக்கு அதிக வரி விதிக்கும் நாடுகள் மீது டிரம்ப் தலைமையில் அமையப் போகும் புதிய அரசு நடவடிக்கை எடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் பாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
அதேநேரம் ராஜாங்க ரீதியிலான உறவுகளில் இந்தியாவுக்குப் பயனுள்ளதாக அமையும் என்றும் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகள் மேலும் வலுப்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கனடாவில் சீக்கியப் பிரிவினைவாதத் தலைவர் நிஜ்ஜார் கொல்லப்பட்டதற்கு இந்தியாவைக் கனடா குற்றம்சாட்டி வரும் பிரச்னையில் அமெரிக்காவும் சேர்ந்து கொண்டது.
Author: VS NEWS DESK
pradeep blr