தலைமை நீதிபதி சந்திரசூட்: ஏஐ வழக்கறிஞருடன் தலைமை நீதிபதி சந்திரசூட் பேசிய காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ஏஐ வழக்கறிஞர் பதிலளித்ததை பார்த்து தலைமை நீதிபதி சந்திரசூட் வியப்படைந்தார். செயற்கை நுண்ணறிவு வழக்கறிஞர் துறையிலும் காலூண்றி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
உருவானது ஏஐ வழக்கறிஞர்
இப்படி ஏஐ பல துறைகளில் பயன்படுத்தப்பட்டு வரும் சூழலில், தற்போது, ஏஐ வழக்கறிஞர் ஒன்று உச்ச நீதிமன்றத்தில் உள்ள தேசிய நீதித்துறை அருங்காட்சியகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் உள்ள தேசிய நீதித்துறை அருங்காட்சியகம் மற்றும் காப்பகத்தின் திறப்பு விழாவில், இந்திய தலைமை நீதிபதி சந்திரசூட், செயற்கை நுண்ணறிவு வழக்கறிஞருடன் உரையாடினார்.
இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஏஐ வழக்கறிஞரிடம் சில கேள்விகளையும் அவர் கேட்டார். அதன்படி, “இந்தியாவில் மரண தண்டனை அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டதா?” என்று தலைமை நீதிபதி சந்திரசூட் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த ஏஐ வழக்கறிஞர், “ஆம் இந்தியாவில் மரண தண்டனை என்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டது. இது உச்ச நீதிமன்றத்தால் தீர்மானிக்கப்பட்ட அரிதான வழக்குகளுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இது மிகவும் கொடூரமான குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்படுகிறது” என்று பதில் அளித்தது.
வியந்து பார்த்த தலைமை நீதிபதி
அந்த ஏஐ வழக்கறிஞர் கண்ணாடி, வழக்கறிஞர் ஆடை, கோர்ட் அணிந்து சரியான பதிலை அளித்தது. ஏஐ வழக்கறிஞர் பதிலளித்ததை தலைமை நீதிபதி சந்திரசூட் வியந்து பார்த்தார். அப்போது, அடுத்த தலைமை நீதிபதியாக வரும் 11ஆம் தேதி பதவியேற்க உள்ள நீதிபதி சஞ்சீவ் கண்ணாவும் உடன் இருந்தார்.
இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. செயற்கை நுண்ணறிவு வழக்கறிஞர் துறையிலும் காலூண்றி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. விழாவில் பேசிய தலைமை நீதிபதி, “புதிய அருங்காட்சியகம் உச்ச நீதிமன்றத்தின் நெறிமுறைகளையும் தேசத்திற்கான அதன் முக்கியத்துவத்தையும் பிரதிபலிக்கிறது.
“இளைய தலைமுறையினருக்கு வழிகாட்டு இடம்”
இந்த அருங்காட்சியகம் இளைய தலைமுறையினருக்கு வழிகாட்டு இடமாக மாற வேண்டும் என விரும்புகிறேன். பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இருந்து இளைய மாணவர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் நீதித்துறைக்கு தொடர்புடையாதவர்கள் இங்கு வந்து நீதித்துறையின் முக்கியத்துவத்தை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
அவர்களுக்கு சட்டத்தின் முக்கியத்துவத்தை நேரடி அனுபவத்தை கொண்டு வர வேண்டும் என்பது நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களாகிய நாம் அனைவரும் செய்யும் பணி. இந்த அருங்காட்சியகம் நீதிபதிகளை மையமாகக் கொண்டது அல்ல.
அரசியலமைப்பு குறித்தும், அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் குறித்தும் தெரிந்து கொள்ள பல விஷயங்கள் உள்ளன. பார் உறுப்பினர்கள் இந்த இடத்தை கட்டாயம் பார்க்க வேண்டும். இதில் பல விஷயங்களும் நிறைந்துள்ளது” என்றார்.
Author: VS NEWS DESK
pradeep blr