Search
Close this search box.

TNPSC Group 4: குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவரா நீங்கள்? டி.என்.பி.எஸ்.சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வின் முடிவுகள் க

டந்த அக்டேபார் 28ஆம் தேதி வெளியான நிலையில், தற்போது சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேர்வர்கள் தங்கள் சான்றிதழ்களை ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம் என்று டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி எனும் தமிழ்நாடு அரசு பணியாளர் மூலம் நிரப்பப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் குரூப் 2, குரூப் 4 என பல்வேறு போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த ஜூன் 9ஆம் தேதி குரூப் 4 நடத்தப்பட்டது. […]

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வின் முடிவுகள் கடந்த அக்டேபார் 28ஆம் தேதி வெளியான நிலையில், தற்போது சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேர்வர்கள் தங்கள் சான்றிதழ்களை ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம் என்று டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி எனும் தமிழ்நாடு அரசு பணியாளர் மூலம் நிரப்பப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் குரூப் 2, குரூப் 4 என பல்வேறு போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த ஜூன் 9ஆம் தேதி குரூப் 4 நடத்தப்பட்டது. இந்த தேர்வு சுமார் 8,932 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

குரூப் 4 தேர்வுக்கு இந்த ஆண்டு 6,244 இடங்கள் நிரப்ப போவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்தது. பிறகு, மீண்டும் அந்த காலி பணியிடங்களை உயர்த்தி அறிவித்தது. அதாவது அரசு துறைகளில் மொத்தம் 8,932 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவித்தது.

இந்த காலி பணியிடங்களுக்கு கடந்த ஜூன் 9 ஆம் தேதி நடைபெற்ற இந்த தேர்வில் 7,247 மையங்களில் சுமார் 15.88 லட்சம் பேர் தேர்வு எழுதினர். தேர்வு முடிந்து ஐந்து மாதங்களுக்கு பிறகு அக்டோபர் 28ஆம் தேதி முடிவுகள் வெளியானது.

இந்த நிலையில், கணினி வழியாக சான்றிதழ் சரிபார்ப்பிற்காக ஆவண சமர்ப்பிப்பு நாளை தொடங்கும் என்று டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. அதாவது, நாளை தொடங்கி வரும் 21 வரை சான்றிதழ் சமர்ப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அறிவிப்பு

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-IV (தொகுதி-IV பணிகள்)-ன் தேர்வு முடிவுகள், தேர்வர்களின் மதிப்பெண் மற்றும் தரவரிசை விவரங்கள் 28.10.2024 அன்று தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டன.

கணினி வழித்திரை சான்றிதழ் சரிபார்ப்பிற்கு (Onscreen Certificate Verification) மதிப்பெண்கள், ஒட்டுமொத்த தரவரிசை எண், இட ஒதுக்கீட்டு விதி, காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அடிப்படையில் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் 07.11.2024 அன்று வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட (6) ஆறு வேலை நாட்களில் இப்பட்டியல் தேர்வாணையத்தால் விரைவாக வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கணினி வழித்திரை சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்கள் தங்களது சான்றிதழ்களை 09.11.2024 முதல் 21.11.2024 வரை தேர்வாணைய இணைய தளத்தின் ஒரு முறைப் பதிவு பிரிவின் (One Time Registration Platform) மூலம் பதிவேற்றம் செய்யலாம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

VS NEWS DESK
Author: VS NEWS DESK

pradeep blr

ಬಿಸಿ ಬಿಸಿ ಸುದ್ದಿ

ಕ್ರಿಕೆಟ್ ಲೈವ್ ಸ್ಕೋರ್

ಚಿನ್ನ ಮತ್ತು ಬೆಳ್ಳಿ ಬೆಲೆಗಳು