Search
Close this search box.

சூரியனார் கோவில் ஆதீன மடத்தை விட்டு வெளியேறிய மடாதிபதி.. கேட்டை பூட்டிய மக்கள்.. பெரும் பரபரப்பு!

தஞ்சாவூர்: கும்பகோணம் சூரியனார் கோவில் ஆதீன மடாதிபதி மகாலிங்க பரமாச்சாரியார், அண்மையில் திருமணம் செய்து கொண்டதற்கு கடுமையான எதிர்ப்பு எழுந்த நிலையில், மடாதிபதி மடத்தை விட்டு வெளியேறினார். சூரியனார் கோயில் சிவவாக்கிய யோகிகள் ஆதீன மடத்தின் கேட்டை கிராம மக்கள் இழுத்து மூடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற சூரியனார் கோயில் ஆதீனம் அமைந்துள்ளது. இந்த ஆதீனத்தின் 28வது தலைமை மடாதிபதியாக மகாலிங்க சுவாமி (54) என்பவர் இருந்து வருகிறார். இந்நிலையில், ஹேமா ஸ்ரீ (வயது 47) என்ற பெண் பக்தர் ஒருவரை மகாலிங்க சுவாமி திருமணம் செய்துள்ளார். இவர்கள் இருவரும் பெங்களூரில் கடந்த அக்டோபர் மாதம் 10ஆம் தேதி பதிவு திருமணம் செய்து கொண்டனர்.

சூரியனார் கோயில் ஆதீன மடாதிபதி திருமணம் செய்துகொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. திருமணத்திற்கான பதிவுச் சான்றிதழும் சமூக வலைதளங்களில் வைரலானது. மடாதிபதி திருமணம் செய்து கொண்டதால் மடத்தின் மாண்பு குறைந்து விட்டதாக ஆன்மிக ஆர்வலர்கள் விமர்சித்தனர். கிராம மக்களில் ஒரு தரப்பினரும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

திருமணம் செய்து கொண்டது தொடர்பாக விளக்கம் அளித்த மகாலிங்க சுவாமி, “திருமணம் ஆனவர்களும் ஆதீன மடாதிபதியாக இருந்துள்ளனர். எனவே நான் யாரிடமும் எதையும் மறைக்க விரும்பவில்லை. நான் திருமணம் செய்து கொண்ட ஹேமா ஸ்ரீ, மடத்துக்கு பக்தராக வந்து சென்றவர் ஆவார். இனியும் அவர் மடத்திற்குப் பக்தராக மட்டுமே வந்து செல்வார்’ எனத் தெரிவித்தார்.

சூரியனார் கோயில் ஆதீன மடாதிபதி திருமணம் செய்த விவகாரத்தில், மக்கள் எதிர்ப்பு காரணமாக அவர் இன்று ஆதீன மடத்தைவிட்டு வெளியேறினார். மடாதிபதி மகாலிங்க பரமாச்சாரியார் வெளியேற வேண்டும் என ஒரு தரப்பினரும், மற்றொரு தரப்பினர் அவரே மடத்தை தொடர்ந்து நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இதையடுத்து, இரு தரப்பும் சண்டை போட்டுக்கொள்ள வேண்டாம் எனக் கூறிவிட்டு, மடத்தை விட்டு வெளியே சென்று அமர்ந்தார் ஆதீனம் மகாலிங்க பரமாச்சாரியார். ஆதீன மடத்தை இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் எடுக்கக்கோரியும் அவர் கடிதம் அளித்துள்ளார்.

ஆதீனம் மகாலிங்க பரமாச்சாரியார் வெளியே சென்றதை அடுத்து, எதிர் தரப்பைச் சேர்ந்தவர்கள், மடத்தின் கேட்டை மூடி பூட்டு போட்டுள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மோதலை தடுக்க 2 டி.எஸ்.பிக்கள் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

VS NEWS DESK
Author: VS NEWS DESK

pradeep blr

ಬಿಸಿ ಬಿಸಿ ಸುದ್ದಿ

ಕ್ರಿಕೆಟ್ ಲೈವ್ ಸ್ಕೋರ್

ಚಿನ್ನ ಮತ್ತು ಬೆಳ್ಳಿ ಬೆಲೆಗಳು