Ration Card Update: ரேஷன் கார்டுகளை வைத்திருப்பவர்கள் இ-கேஒய்சி எனப்படும் சிறப்பு செயல்முறையை முடிக்க வேண்டும். இதன் மூலம் போலி கார்டுகளை அரசு ரத்து செய்ய முடியும்.குறைந்த ஆண்டு வருமானம் உள்ளவர்கள், விவசாயிகள், பெண்கள் என பலருக்கு சிறப்பு திட்டங்களை உருவாக்கி மத்திய, மாநில அரசுகள் உதவி செய்து வருகிறது. ஏராளமான மக்கள் இந்த திட்டங்களின் மூலம் பயன் பெற்று வருகின்றனர்.
உணவு மற்றும் பிற உதவி தேவைப்படுபவர்களுக்கு ரேஷன் கார்டுகள் மூலம் அரசு உதவி செய்து வருகிறது. இந்தியாவில், பலர் இந்த ரேஷன் கார்டுகளை வைத்துள்ளனர். தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் மூலம் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு குறைந்த விலையில் உண்வு பொருட்கள் வழங்கப்படுகிறது. மேலும், ரேஷன் கார்டு வைத்திருப்பதன் மூலம் அரசின் மற்ற சலுகைகளை மக்கள் அனுபவிக்க முடியும்.இருப்பினும், ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய செய்தி உள்ளது.
மத்திய அரசு சுமார் 5.8 கோடி ரேஷன் கார்டுகளை ரத்து செய்துள்ளது. எனவே, ரத்து செய்யப்பட்ட ரேஷன் கார்டு பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என சரிபார்ப்பது நல்லது. ரேஷன் கார்டு வைத்திருக்கும் ஒவ்வொருவரும் e-KYC கட்டாயம் என்று மத்திய உணவு அமைச்சகம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. இதை எப்போது செய்து முடிக்க வேண்டும் என்றும் அரசு சில நிபந்தனைகளை அறிவித்துள்ளனர். ஆனால் பல ரேஷன் கார்டு பயனாளர்கள் இதனை செய்து முடிக்கவில்லை. சிலர் அரசின் நலத்திட்டங்களை பெற போலி ரேஷன் கார்டுகளை உருவாக்கியுள்ளனர்
இதனை தடுக்க சுமார் 58 மில்லியன் போலி ரேஷன் கார்டுகளை அரசாங்கம் கண்டுபிடித்து ரத்து செய்துள்ளது. இப்போது இந்த அமைப்பு டிஜிட்டல் முறையில் இருப்பதால், ரேஷன் கார்டு யாரிடம் உள்ளது என்பதைச் சரிபார்ப்பது எளிது. இந்திய உணவு அமைச்சகம் ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் e-KYC கட்டாயம் என்று கூறியுள்ளது, இது நீங்கள் யார் என்பதை நிரூபிக்கும் வழியாகும். ஆனால் இன்னும் பலர் அதை செய்யவில்லை. இதன் காரணமாக பல போலி ரேஷன் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளது. இந்த போலி கார்டுதாரர்களை கண்டுபிடித்து, அவர்களது ரேஷன் கார்டுகளை அரசு ரத்து செய்துள்ளது. உங்களிடம் ரேஷன் கார்டு இருந்தால் டிசம்பர் 31, 2025க்குள் உங்கள் e-KYC செயல்முறையை முடிக்கவும். இல்லையெனில், உங்கள் ரேஷன் கார்டையும் இழக்க நேரிடும்.
Author: VS NEWS DESK
pradeep blr