Search
Close this search box.

Wayanad LS Bypoll Results 2024: அண்ணனின் சாதனையை முறியடித்த தங்கை – 4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் பிரியங்கா முன்னிலை

கேரளாவின் வயநாட்டில் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி 56,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார், அதே நேரத்தில் சிபிஐயின் சத்யன் மொகேரி 30000 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கியுள்ளார்.காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் வயநாடு மற்றும் ரேபரேலி தொகுதிகளில் போட்டியிட்டு, 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். ஒருவர் 2 தொகுதிகளில் எம்.பி பதவி வகிக்க முடியாது என்பதால், வயநாடு எம்.பி பதவியை ராஜினாமா செய்தார். ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி எம்.பி-யாக நீடிக்கிறார்.

இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் தேதியுடன் நாட்டில் காலியாக உள்ள மற்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியையும் அறிவித்தது. அதன்படி, வயநாடு மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் நவம்பர் 13-ம் தேதி நடைபெற்றது.

காங்கிரஸ் தலைமையிலான யு.டி. எப் வேட்பாளர் பிரியங்கா காந்தி, சி.பி.ஐ (எம்) தலைமையிலான எல்.டி.எஃப் கட்சியின் சத்யன் மொகேரி மற்றும் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நவ்யா ஹரிதாஸ் உள்ளிட்ட முன்னணி கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இந்த நிலையில்,  வயநாடு மக்களவைத் தொகுதிக்கான இன்று சனிக்கிழமை (நவ.23) நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி, வயநாடு மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி முன்னிலை வகித்து வருகிறார்.

VS NEWS DESK
Author: VS NEWS DESK

pradeep blr

ಬಿಸಿ ಬಿಸಿ ಸುದ್ದಿ

ಕ್ರಿಕೆಟ್ ಲೈವ್ ಸ್ಕೋರ್

ಚಿನ್ನ ಮತ್ತು ಬೆಳ್ಳಿ ಬೆಲೆಗಳು