சில தினங்களுக்கு முன் நவம்பர் 28ஆம் தேதி நானும் அரசுவும் திருமணம் செய்து கொண்ட அதே நாளில் என்னுடைய ஆன்மீகத்திற்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட ரோகித் என்பவரை நான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என அன்னபூரணி அறிவித்திருந்தார்.
ஆதிபராசக்தியின் மறு உருவம் எனக்கூறி பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்கி வந்த திருவண்ணாமலை அன்னபூரணி மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டு தகவல் அந்த மாவட்டம் முழுவதும் பேசுபொருளாக மாறி உள்ளது. ஆன்மீக பூமியான இந்தியாவில் இறைவன் பெயரை கூறிக்கொண்டு பலவிதமான சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. அதிலும் இறைவனின் மறு உருவம் நான் தான் என சொல்லும் நபர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த வகையில் கடந்த 4 ஆண்டுகளாக நான்தான் அம்மன், ஆதிபராசக்தியின் மறு உருவம் என சொல்லிக்கொண்டு தொடர்ச்சியாக சர்ச்சையில் சிக்கி வருபவர் அன்னபூரணி.
யார் அந்த அன்னபூரணி?
செங்கல்பட்டு மாவட்டத்தில் அன்னபூரணி அரசு அம்மன் என்ற பெயரில் தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வந்த இவர் ஆதிபராசக்தியின் மறு உருவம் எனக் கூறி பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வருகிறார். அவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் கண்டனத்தை பெற்றது. மேலும் தனக்கு தானே கோவில் ஒன்றையும் கட்டி வழிபாடும் நடத்தி வருகிறார். இதற்கிடையில் முதல் கணவரை பிரிந்த அன்னபூரணி இரண்டாவதாக அரசு என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவர் மர்மமான முறையில் பிறந்த நிலையில் அரசுக்கு கோயில் கட்டி வழிபட்டார்.
இந்த நிலையில் தான் நவம்பர் 28ஆம் தேதி நானும் அரசுவும் திருமணம் செய்து கொண்ட அதே நாளில் என்னுடைய ஆன்மீகத்திற்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட ரோகித் என்பவரை நான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என அன்னபூரணி அறிவித்திருந்தார். அன்றைய தினம் விருப்பமுள்ளவர்கள் அரசுவின் அடுத்த பரிணாம நிகழ்வான தெய்வீக திருமணத்தில் கலந்துகொண்டு ஆசீர்வாதம் வாங்கி செல்லலாம் எனவும் தெரிவித்திருந்தார்.
இந்த திருமணத்தை முன்னிட்டு திருவண்ணாமலையில் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தது. மேலும் பிரபஞ்சத்திலேயே அற்புதமான நிகழ்வு, தெய்வீக சங்கமத்திற்கு குடும்பத்தோடு வாருங்கள் என பக்தர்களுக்கும் அதில் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. ரோகித்தை அரசுவின் புதிய பரிணாமம் என அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஓயாத சர்ச்சை
ஏற்கனவே அன்னபூரணி பிரபலமாக தொடங்கிய நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு தனியார் தொலைக்காட்சியில் நடந்த குடும்ப பிரச்சினைகளை பேசி தீர்க்கும் நிகழ்ச்சியில் அவர் தனது கணவர் மற்றும் 14 வயது பெண் குழந்தை பிரிந்து வந்த வீடியோவும் வைரலானது. ஆன்மீக பூமியாக திகழும் திருவண்ணாமலை மாவட்டத்தில் கீழ்பென்னாத்தூர் அருகே ராஜா தோப்பு என்ற பகுதியில் அவர் ஒரு ஏக்கர் நிலம் வாங்கி அங்கு ஆசிரமம் அமைத்துள்ளார். அவருடைய சிலை அமைக்கப்பட்டுள்ள கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்ற போது அம்மன் வேடத்தில் அவதரித்த அன்னபூரணிக்கு ஆண்கள் பெண்கள் என அனைவரும் பாத பூஜை செய்து சூடம் முயற்சி வழிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
மேலும் நான் அருள்வாக்கு சொல்வதில்லை என்றும், ஆன்மிகத்தை தான் அனைவருக்கும் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன். என்னை யாராலும் அழிக்க முடியாது. அருளாசி வழங்குவதை மக்களுக்கு சேவையாக செய்து கொண்டிருக்கிறேன். இனிமேலும் என்னுடைய உடல் இந்த பூமியில் இருக்கும் வரை சேவையாக செய்வேன் என அன்னபூரணி முன்னதாக தெரிவித்திருந்தார்.
விமரிசையாக நடந்த திருமணம்
இதனிடையே நேற்று காலை அன்னபூரணியின் திருமணம் வெகு விமரிசையாக கீழ்பெண்ணாத்தூர் ராஜா தோப்பில் உள்ள ஆசிரம வளாகத்தில் நடைபெற்றுள்ளது. புரோகிதர்கள் யாகம் வளர்த்து மந்திரங்கள் ஓத முறைப்படி திருமண சடங்குகள் அனைத்தும் நடைபெற்றது. அன்னபூரணியை மூன்றாவதாக திருமணம் செய்த ரோகித் என்பவர் யார் என்பதுதான் தற்போது அந்த மாவட்ட மக்களின் விடை தெரியாத பதிலாக உள்ளது.
அதே சமயம் அன்னபூரணியைச் சுற்றி ஏகப்பட்ட சர்ச்சையான சம்பவங்களும் நடைபெற்று உள்ளது. அவர் ஆன்மீகம் என்ற பெயரில் பக்தர்களை மூளைச்சலவை செய்து தன்னுடைய பண தேவைக்காக பயன்படுத்தி வருகிறார் என குற்றம் சாட்டப்பட்டது. கடந்த 4 ஆண்டுகளாக அன்னபூரணி குறித்து பல்வேறு காவல் நிலையங்களில் புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் அன்னபூரணி ஹனிமூன் சென்று வந்ததாக கூட ஒரு போட்டோ சமீபத்தில் வைரல் ஆகியிருந்தது. இப்படியான சர்ச்சைகளுக்கு மத்தியில் அவர் 3வது திருமணம் செய்துக் கொண்டுள்ளார்.
Author: VS NEWS DESK
pradeep blr