Public sector banks FD interest Rates: ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுகளுக்கு வட்டியை வாரி வழங்கும் பொதுத்துறை வங்கிகள் குறித்து இதில் நாம் பார்க்கலாம். பொதுத்துறை வங்கிகள் சிறப்பு எஃப்.டி திட்டங்களையும் அமல்படுத்தியுள்ளன.
பொதுத்துறை வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்: குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் உறுதியான வருவாய் அளிப்பதால் ஃபிக்ஸட் டெபாசிட் முதலீகள் முன்னணி வகிக்கின்றன. இந்த முதலீடுகளில் நிலையான வட்டி விகிதம் வழங்கப்படுகின்றன. மேலும், ரிஸ்க் விகிதமும் பூஜ்யமாக உள்ளது. இந்தியாவை பொறுத்தமட்டில் ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடு, முதலீட்டாளர்கள் விரும்பும் ஒர் முதலீட்டு கருவியாக உள்ளது. கடந்த காலங்களில் ஒப்பிடும்போது வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்கள் அதிகளவில் உயர்ந்துள்ளன. குறிப்பாக ஃபிக்ஸட் டெபாசிட் மூலமாக எஸ்.பி.ஐ பெருமளவு வருவாய் பெறுகிறது. சமீபத்திய தரவுகள் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களில் அதிகளவு எஸ்.பி.ஐ பெற்றுள்ளது எனக் குறிப்பிடுகின்றன.
பொதுத்துறை வங்கிகள்
மத்திய அரசின் ஆதரவு பெற்ற பொதுத்துறை வங்கிகள், இந்திய ரிசர்வ் வங்கியின் நேரடி கட்டுப்பாட்டில் வருகின்றன. இதனால், இந்த வங்கிகளில் முதலீடு செய்வது மிகவும் பாதுகாப்பான ஒன்றாக பார்க்கப்படுகிறது. மேலும், ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகள் போன்று பொதுத்துறை வங்கிகளில் ஃபிக்ஸட் டெபாசிட் முதலீட்டில் கட்டுப்பாடுகள் இல்லை.
இந்த நிலையில் பொதுத்துறை வங்கிகளின் சிறப்பு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள் மற்றும் 1,3 மற்றும் 5 ஆண்டு திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.
சிறப்பு எஃப்.டி திட்டங்கள்
முதலில், பொதுத்துறை வங்கிகள் வழங்கும் சிறப்பு எஃப்.டி திட்டங்களும் அவற்றின் வட்டி விகிதம் குறித்தும் பார்க்கலாம்.
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா 456 நாள்கள் சிறப்பு திட்டத்துக்கு 7.80 சதவீதம் வட்டி வழங்குகிறது. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா 444 நாள்கள் அம்ரித் விருஷ்டி திட்டத்துக்கு 7.75 சதவீதம் வட்டி வழங்குகிறது.
பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கியை பொறுத்தமட்டில் 555 நாள்கள் ஸ்பெஷல் எஃப்.டிக்கு 7.95 சதவீதம் வட்டியை வழங்குகிறது. அதேநேரம், பஞ்சாப் நேஷனல் வங்கி 400 நாள்கள் டெபாசிட்டுக்கு 7.75 சதவீதம் வட்டி வழங்குகிறது.
இந்தியன் ஒவர்சீஸ் வங்கி
இந்தியள் வங்கி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிகள் முறையே 1 ஆண்டு 375 நாள்கள் திட்டம் மற்றும் 444 நாள்கள் சிறப்பு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்துக்கு 7.80 சதவீதம் மற்றும் 7.80 சதவீதம் வட்டி வழங்குகிறது.
கனரா வங்கியை பொறுத்தமட்டில் 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரையிலான எஃப்.டி திட்டங்களுக்கு 7.90 சதவீதம் வட்டி வழங்குகிறது. சென்டிரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி 444 நாள்கள் டெபாசிட்டுக்கு 7.95 சதவீதம் வட்டி வழங்குகிறது.
பேங்க் ஆப் பரோடா
மற்றொரு பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் பரோடா 400 நாள்கள் எஃப்.டிக்கு 7.80 சதவீதமும், பேங்க் ஆஃப் இந்தியா 400 நாள்கள் டெபாசிட்டுக்கு 7.80 சதவீதமும், பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா 333 நாள்கள் டெபாசிட்டுக்கு 7.85 சதவீதமும் வட்டியை வழங்குகின்றன.
பொதுத்துறை வங்கிகளின் 3 ஆண்டு ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதம்
- இந்தியன் வங்கி 675 சதவீதம்
- இந்தியன் ஒவர்சீஸ் வங்கி 7.00 சதவீதம்
- பஞ்சாப் நேஷனல் வங்கி 7.50 சதவீதம்
- பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கி 6.80 சதவீதம்
- ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா 7.30 சதவீதம்
- யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா 7.20 சதவீதம்
- பேங்க் ஆஃப் பரோடா 7.65 சதவீதம்
- பேங்க் ஆஃப் இந்தியா 7.25 சதவீதம்
- பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா 7.00 சதவீதம்
- சென்டிரல் பேங்க் ஆஃப் இந்தியா 7.25 சதவீதம்
- கனரா வங்கி 7.90 சதவீதம்
இந்த ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள் டிச.4, 2024 முதல் பொருந்துகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை எந்தவொரு எஃப்.டி திட்டத்தையும் விளம்பரப்படுத்தவில்லை. எந்தவொரு திட்டத்தில் முதலீடுக்கு முன்பும், செபி-யால் அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டு நிபுணர்களிடம் ஆலோசனைகளை பெற பரிந்துரைக்கப்படுகிறது. மேலும், ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு நிதி உத்தரவாதம் இருக்கிறது. எனினும், பிற வங்கிகளுடன் ஒப்பிட்டு பார்ப்பது நல்லது.