இந்த வாரம் முழுவதும் டாஸ்க் உட்பட அனைத்திலும் சரியாக பங்கேற்காத வொர்ஸ்ட் பர்ஃபாமர்கள் இரண்டு நபர்களை தேர்ந்தெடுக்க பிக்பாஸ் அறிவுறுத்துகிறார். அதில் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் பெரும்பாளானோர் ஜாக்குலின் மற்றும் சௌந்தர்யா இருவரும் தேர்தெடுக்கப்பட்டனர்.
பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் இன்று 61-வது நாளிற்கான முதல் புரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. அதில் இந்த வாரம் முழுவது சிறப்பாக பங்கெடுக்காத இரண்டு நபர்களை பிக்பாஸ் தேர்ந்தெடுக்க சொல்கிறார். அவர்களுக்கான தண்டனையும் இன்று வழங்கப்படுவது அந்த வீடியோவில் தெரியவந்துள்ளது. அதன்படி கடந்த 7 சீசன்களாக இல்லாத ஒன்றாக இந்த 8-வது சீசனில் பிக்பாஸ் வீடு இரண்டாக பிரிந்து ஆண்கள் மற்றும் பெண்கள் என இரண்டு அணிகளாக விளையாடினர். இந்த சீசனில் பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டிருந்தது. 7 சீசன்களாக நடிகர் கமல் ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வந்த நிலையில் அவர் நிகழ்ச்சியை விட்டு விலகினார். அதன் பிறகு தற்போது விஜய் சேதுபதி இந்த 8-வது சீசனை தொகுத்து வழங்குகிறார். கடந்த அக்டோபர் மாதம் 6-ம் தேதி இந்த சீசன் தொடங்கியது.
கடந்த அக்டோபர் மாதம் 6-ம் தேதி பிக்பாஸ் தமிழ் 8-வது சீசன் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் ரவீந்தர் சந்திரசேகர், அருண் பிரசாத், அன்ஷிதா, தீபக், தர்ஷிகா, தர்ஷா குப்தா, ஜாக்குலின், முத்துக்குமார், ஜெப்ரி, அர்னவ், ரஞ்சித், பவித்ரா ஜனனி, ஆர்.ஜே.ஆனந்தி, சாச்சனா, சத்யா,சுனிதா, செளந்தர்யா, வி.ஜே. விஷால் என 18 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டனர்.
முதல் வார நாமினேஷனில் இடம் பிடித்த ரவீந்தர் குறைந்த வாக்குகள் பெற்றதன் அடிப்படையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். அதனைத் தொடர்ந்து இரண்டாவது வார நாமினேஷனில் இடம் பிடித்த அர்னவ் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.
மூன்றாவது வாரம் தர்ஷாவும் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். 4-வது வாரம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எவிக்ஷன் இல்லை என்று விஜய் சேதுபதி அறிவித்தார். அதனை தொடர்ந்து 5-வது வாரம் சுனிதா குறைவான வாக்குகள் பெற்றதன் அடிப்படையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.
மேலும் 6 போட்டியாளர்கள் வைல்ட் கார்ட் என்ட்ரியாக வீட்டிற்குள் அனுப்பப்பட்டனர் கடந்த 3-ம் தேதி அன்று. அதில் ரியா தியாகராஜன், சிவகுமார், ரானவ், மஞ்சரி, ரயான், வர்ஷினி ஆகியவர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர்களாக களம் இறங்கியுள்ளனர். இதனால் போட்டியின் நிலவரம் சற்று சூடு பிடித்தது.
கடந்த 6-வது வாரம் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே வந்த ரியா தியாகராஜன் பிக்பாஸ் வீட்டை விட்டு எவிக்ட் ஆனார். இதனை தொடர்ந்து 7-வது வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வர்ஷினி வெளியேற்றப்பட்டார். கடந்த 8-வது வாரம் வைல்கார்ட் என்ட்ரியாக உள்ளே வந்த சிவக்குமார் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.
முன்னதாக 50 நாட்களாக இரண்டு அணிகளாக பிரிந்து விளையாடி ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினரை கடந்த 7-வது வாரம் முதல் ஒன்றாக்கி இனி பெண்கள் அணிகளுக்கு இடையே போட்டி இல்லை தனி நபர்களுக்கு இடையே போட்டி என்று அறிவிக்கப்பட்டது.
9-வது வாரம் பிக்பாஸ் வீட்டின் கேப்டனாக ஜெஃப்ரி தேர்வாகியுள்ளார். இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் ஓபன் நாமினேஷன் நடைப்பெற்றது. அதில், ஜாக்குலின், சௌந்தர்யா, மஞ்சரி, பவித்ரா ஜனனி, தர்ஷிகா, ஆனந்தி, சாச்சனா, ரயன், முத்துகுமரன், ரானவ், சத்யா மற்றும் ரஞ்சித் ஆகியோர் நாமினேட் ஆகியுள்ளனர். இதில் யார் வெளியேறுவார்கள் என்று இந்த வார இறுதியில் தெரியவரும்.
இந்த நிலையில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் ஃப்ரீ பாஸிற்காக பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் இரண்டு அணிகளாக பிரிக்கப்பட்டு ஏஞ்சல் மற்றும் டெவில் என்று டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது. இதில் முதலாவதாக ஏஞ்சல்ஸ் அணியில் 8 போட்டியாளர்களும் டெவில் அணியில் 9 போட்டியாளர்களும் போட்டியிட்டனர்.
அதனை தொடர்ந்து ஏஞ்சலாக இருந்தவர்கள் டெவிலாகவும், டெவிலாக இருந்தவர்கள் ஏஞ்சலாகவும் மாறி நேற்று விளையாடினர். முதல் நாள் இருந்த அளவிற்கு நேற்று நிகழ்ச்சி அவ்வளவு சுவாரஸ்யமாக செல்லவில்லை என்பது குறிப்பிடதக்கது. இந்த நிலையில் இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் 61-வது நாளிற்கான புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.
அந்த வீடியோவில் இந்த வாரம் முழுவதும் டாஸ்க் உட்பட அனைத்திலும் சரியாக பங்கேற்காத வொர்ஸ்ட் பர்ஃபாமர்கள் இரண்டு நபர்களை தேர்ந்தெடுக்க பிக்பாஸ் அறிவுறுத்துகிறார். அதில் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் பெரும்பாளானோர் ஜாக்குலின் மற்றும் சௌந்தர்யா இருவரும் தேர்தெடுக்கப்பட்டனர்.