மோடிக்கு பயம், தி.மு.க அரசை டிஸ்மிஸ் செய்தேன்.. சுப்பிரமணிய சாமி அதிரடி!

one country one election: இந்தியாவில் ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு வராது; மோடிக்கு பயம் வந்துவிட்டது. இதனால்தான் ஒரே நாடு ஒரே திட்டம் என்கிறார் மோடி என சுப்பிரமணியன் சாமி கூறியுள்ளார்

இந்தியாவின் முன்னாள் சட்ட அமைச்சர் சுப்பிரமணியன் சாமி டெல்லியில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது, “மோடிக்கு பைத்தியம் பிடித்துவிட்டது. ஒரே நாடு ஒரே தேர்தல் இந்தியாவுக்கு சாத்தியம் இல்லை. இது பல மொழிகள் கொண்ட நாடு. இங்கு பல மாநிலங்களில் பல்வேறு நாள்களில் தேர்தல்கள் நடைபெறும். இதுதான் நடைமுறை. மேலும், இந்தியாவை பொறுத்தவரை ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியம் இல்லை.

மசோதா தோற்கும்

சீனா, ரஷ்யாவில் இதுபோன்று நடக்கும். நாம் டெல்லியில் இருந்து அனைத்து மாநிலத்தையும் அடக்க முடியாது. மேலும், இந்தத் திட்டம் நடைமுறைக்கு நிச்சயம் வராது. பின்பு, நான் நாட்டுக்கு செய்ய நினைத்தேன். ஆனால் பல கட்சிகள் ஒத்துவரவில்லை என்பார்கள்.
முதலில் இந்த மசோதா நாடாளுமன்றத்திலே தோற்கடிக்கப்பட்டுவிடும். இந்த மசோ நாடாளுமன்றத்தில் நிறைவேற 3ல் ஒரு பங்கு மெஜாரிட்டி தேவை. அந்த மெஜாரிட்டி பாரதிய ஜனதா கட்சிக்கு இல்லை.

மோடிக்கு பயம்

மேலும், ஒரே நாடு ஒரே தேர்தல் கொண்டுவந்தாலும் பா.ஜ..க காரன் கூட பா.ஜ.கவுக்கு வாக்களிப்பானா? என்பது தெரியாது. மோடிக்கு பயம் வந்துவிட்டது. அதனால்தான், இவ்வாறு பேசுகிறார்” என்றார்.
மேலும், ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டம் நடைமுறைக்கு வந்தால், செலவு மிச்சப்படுத்தப்படும் எனக் கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு பதிலளித்த சுப்பிரமணிய சாமி, மக்குகள்தான் இதனை நம்புவார்கள் என்றார்.

வழக்கு தொடர்வேன்

இதையடுத்து செய்தியாளர் தங்களுக்கு பிடிக்காத சட்டம் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளீர்களே? அதுபோல் இந்த விஷயத்திலும் வழக்கு தொடர வாய்ப்புகள் உள்ளதா? என்றார்.
இதற்கு பதிலளித்த சுப்பிரமணிய சாமி அதற்கு அவசியம் ஏற்படாது. இந்த மசோதா நாடாளுமன்றத்திலே தோற்கடிக்கப்பட்டுவிடும். ஒருவேளை அவசியம் ஏற்பட்டால் நான் நிச்சயம் மசோதாவுக்கு எதிராக வழக்கு தொடர்வேன்” என்றார்.

திமுக அரசு டிஸ்மிஸ்

முன்னதாக, கடந்த காலத்தில் மறைந்த திமுக தலைவர் விடுதலை புலிகள் உடன் நெருக்கமாக இருந்தார். நான்தான் அந்த அரசை டிஸ்மிஸ் செய்தேன் என்றார்.
கடந்த காலங்களில் ஒரே நாடு ஒரே தேர்தல் முறை பற்றிய பேசிய சுப்பிரமணிய சாமி, தற்போது மாநில தேர்தலையே பல கட்டங்களாக நடத்துகிறோம் என்றார். மேலும், சி.ஏ.ஏ. மற்றும் சிறப்பு அந்தஸ்து ரத்து போன்று ஒரே நாடு ஒரே தேர்தல் முறை அல்ல என்றார். இது சட்டத்தில் உள்ளது என்றும் அவர் கூறினார்.

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா

இந்திய அரசியலமைப்பு 2024 (129-வது திருத்தம்) மசோதா, மற்றும் யூனியன் பிரதேசங்களின் அரசு சட்டம் (1963) உள்ளிட்ட இரட்டை மசோதாக்களின் திருத்தங்களை ஆய்வு செய்ய நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டுக் குழுவில் 39 உறுப்பினர்களைக் கொண்ட உறுப்பினர்கள் உள்ளனர். இதற்கிடையில், இந்த முன்மொழிவை அரசியல் கட்சிகள் மற்றும் ஆர்வலர்களின் கூட்டத்தால் கடுமையாக எதிர்க்கப்படுகிறது, இது ஜனநாயகப் பொறுப்பு மற்றும் கூட்டாட்சித் தன்மையை பாதிக்கும் என்றும் குற்றஞ்சாட்டப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

VS NEWS DESK
Author: VS NEWS DESK

pradeep blr

ಬಿಸಿ ಬಿಸಿ ಸುದ್ದಿ

ಕ್ರಿಕೆಟ್ ಲೈವ್ ಸ್ಕೋರ್

ಚಿನ್ನ ಮತ್ತು ಬೆಳ್ಳಿ ಬೆಲೆಗಳು