TNPSC Group 2A Exam Update: டிஎன்பிஎஸ்சி குரூப் 2,2ஏ தேர்வுகளில் முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது, குரூப் 2,2ஏ தேர்வுகள் மாற்றப்பட்டுள்ள நிலையில், குரூப் 2ஏ இரண்டாம் தாள் தேர்வு முறைகளில் மாற்றம் செய்து டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
டிஎன்பிஎஸ்சி தேர்வில் முக்கிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதே நேரத்தில் குரூப் 2, 2ஏ தேர்வு தேதிகளும் மாற்றப்பட்டுள்ளது என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை பெரும்பாலும் டி.என்.பி.எஸ்.சி எனும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நிரப்பி வருகிறது. இதற்காக குரூப் வாரியாக போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. குரூப் 1, குரூப் 2, 2ஏ உள்ளிட்ட தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் முக்கிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அதே நேரத்தில் குரூப் 2 தேர்வு தேதிகளும் மாற்றப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி தேர்வில் முக்கிய மாற்றம்
அதாவது, துணை வணிக வரி அலுவலர், ஊழல் தடுப்பு உட்பட 507 இடங்களுக்கும், குரூப் 2 ஏ பிரிவில் முதுநிலை ஆய்வாளர், நிதி தணிக்கை உதவி ஆய்வாளர் என 48 துறைகளில் காலியாக உள்ள 1820 பணியிடங்கள் என மொத்தம் 2,540 பணியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பு வெளியானது.
இதன்படி, குரூப் 2,2ஏ முதல்நிலை தேர்வு முடிகள் கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி நடந்தது. இந்த தேர்வில் 29,809 பேர் தேர்ச்சி பெற்றனர். குரூப் 2,2ஏ தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதன்மை தேர்வு நடத்தப்படும். இந்த நிலையில், இந்த குரூப் 2,2ஏ முதன்மை தேர்வுகளில் முக்கிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.
அதாவது, குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. குரூப் 2 மற்றும் 2ஏ முதல் தாள் தேர்வு பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, பிப்ரவரி 2ஆம் தேதி நடைபெறும் என்று கூறப்பட்டிருந்த நிலையில், தற்போது மாற்றப்பட்டுள்ளது.
குரூப் 2,2ஏ தேர்வில் மாற்றம்
அதே நேரத்தில் குரூப் 2 இரண்டாம் தாள் தேர்வு பிப்ரவரி 23ஆம் தேதியும், குரூப் 2ஏ இரண்டாம் தாள் தேர்வு பிப்ரவரி 8ஆம் தேதியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குரூப் 2, குரூப் 2ஏ இரண்டாம் தாள் தேர்வு தேதிகளில் எந்த மாற்றமும் டிஎன்பிஎஸ்சி செய்யவில்லை. குரூப் 2,2ஏ முதல் நாள் தேர்வு தேதிகளை மட்டுமே டிஎன்பிஎஸ்சி மாற்றியுள்ளது.
மேலும், குரூப் 2ஏ தேர்வு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, குரூப் 2ஏ இரண்டாம் தாள் தேர்வு ஓஎம்ஆர் முறையில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, குரூப் 2ஏ தேர்வு கணினி வழியில் நடத்தப்பட்ட நிலையில், தற்போது மாற்றப்பட்டுள்ளது.
அண்மையில் நடந்த இரண்டாம் நிலை அரசு உதவி வழக்கறிஞர் தேர்வு கணினி முறையில் நடத்தப்பட்டது. இந்த தேர்வில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதனால் தேர்வர்கள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள். இதனை கருத்தி கொண்டு தான், குரூப் 2ஏ இரண்டாம் தாள் தேர்வு ஓம்எம்ஆர் முறையில் நடத்தப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.