காலையிலேயே அதிர்ச்சி.. கடலூரில் ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து… ஆபத்தான நிலையில் 30 பேர்!

Cuddalore Omni Bus Accident: கடலூரில் ஆம்னி பேருந்துகள் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 40க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாலையின் தடுப்பில் மோதி பேருந்து கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 30க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. நேற்று இரவு சென்னையில் இருந்து கன்னியாகுமரி நோக்கி ஆம்னி பேருந்து புறப்பட்டது. இந்த பேருந்தில் 40க்கும் மேற்பட்டோர் பயணித்தனர். இருக்கை மற்றும் படுக்கை வசதிக் கொண்ட இந்த பேருந்தில் சுமார் 50 பயணிகள் முன்பதிவு செய்து பயணித்தனர். இந்த நிலையில், இந்த பேருந்தில் அதிகாலையில் கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சென்றுக் கொண்டிருந்தது.

கடலூரில் ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து

அப்போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பேருந்து, சாலையின் நடுவே உள்ள தடுப்புச் சுவரில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் ஆம்னி பேருந்தில் பயணித்த 40க்கும் மேற்பட்டோருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்தனர். மேலும், சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ்களும் விரைந்தனர்.

இதனை அடுத்து, விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஒருவர் மட்டும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், ஆம்னி பேருந்தில் பயணித்த 40க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து காரணமாக சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சாலையில் நடுவே பேருந்து கவிழ்ந்துள்ளதால் மற்ற பேருந்துகள் செல்லவதற்கு இடையூறாக உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

30க்கும் மேற்பட்டோர் படுகாயம்

சென்னை – திருச்சி நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் வரிசையில் அணிவகுத்து நின்றுக் கொண்டிருக்கிறது. இதனால் மீட்புப் பணிகள் நடந்து வருகிறது. ஆம்னி பேருந்துகள் சேவை  இரவு நேரங்களில் அதிகமாக இருக்கும். காலை நேரத்தில் குறைவாக இருக்கும் நிலையில், இரவு நேரத்தில் பெரும்பாலான ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

பயண நேரம் குறைவாக இருக்கும் என்பதால் மக்கள் பலரும் ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு செய்து பயணித்து வருகின்றனர். ஆனால், ஆம்னி பேருந்துகள் வேகமாக செல்வதால் விபத்துகள் நடந்து வருவதாக தெரிகிறது. மேலும், இரவு நேரங்களில் ஆம்னி பேருந்துகள்  இயங்கி வருவதால் ஓட்டுநர்களின் தூக்க கலக்கத்தால் விபத்துகள் அரங்கேறி வருகின்றனர்.

எனவே, பொதுமக்கள் பேருந்துகளை மெதுவாக இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில், இன்று  காலையிலேயே கடலூரில் ஆம்னி பேருந்துகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ಬಿಸಿ ಬಿಸಿ ಸುದ್ದಿ

ಕ್ರಿಕೆಟ್ ಲೈವ್ ಸ್ಕೋರ್

ಚಿನ್ನ ಮತ್ತು ಬೆಳ್ಳಿ ಬೆಲೆಗಳು