அரபி மொழியில் ராமாயணம், மகாபாரதம்.. பிரதமர் மோடியின் சந்திப்பு பின்னணி தெரியுமா?

PM Narendra Modi Kuwait visit: இரண்டு நாள் பயணமாக மோடி சனிக்கிழமை குவைத் சென்றடைந்தார். 43 ஆண்டுகளுக்கு பின்னர் குவைத் செல்லும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆவார். இந்த நிலையில், ராமாயணம், மகாபாரதம் அரபி மொழிப்பெயர்பாளர்களை சந்தித்தார்.

அரபி மொழியில் ராமாயணம், மகாபாரதம்.. பிரதமர் மோடியின் சந்திப்பு பின்னணி தெரியுமா?

ராமாயணம், மகாபாரதம் அரபி மொழிப்பெயர்பாளர்கள் உடன் பிரதமர் நரேந்திர மோடி.Image Credit source: Twitter

இந்தியாவின் இரு முக்கிய இதிகாசங்களான மகாபாரதம் மற்றும் ராமாயணத்தை அரபு மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்ட குவைத் நாட்டைச் சேர்ந்த இருவரை பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை (டிச.21, 2024) சந்தித்தார். இந்த இரண்டு காவியங்களின் அரபு பதிப்புகளின் பிரதிகளிலும் பிரதமர் நரேந்திர மோடி கையெழுத்திட்டார். முன்னதாக, இரண்டு நாள் பயணமாக மோடி சனிக்கிழமை குவைத் சென்றடைந்தார். குவைத் நாட்டுக்கு கடந்த 43 ஆண்டுகளில் செல்லும் முதல் பிரதமர் நரேந்திர மோடி ஆகும். இங்கு கடைசியாக 1981 இல் இந்திரா காந்தி சென்றிருந்தார்.

அரபி மொழியில் ராமாயணம், மகாபாரதம்

இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “ராமாயணம் மற்றும் மகாபாரதத்தின் அரபு மொழிபெயர்ப்புகளைப் பார்த்ததில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். அப்துல்லா அல்-பரூன் மற்றும் அப்துல் லத்தீஃப் அல்-நெசெஃப் ஆகியோரின் மொழிபெயர்ப்பு மற்றும் அவர்களின் முயற்சிகளுக்காக நான் அவர்களை மனமார பாராட்டுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், “அவர்களின் முயற்சி உலகளவில் இந்திய கலாச்சாரத்தின் பிரபலத்தை எடுத்துக்காட்டுகிறது” எனவும் தெரிவித்துள்ளார். முன்னதாக, அக்டோபரில் மோடியின் ‘மன் கி பாத் (மனதின் குரல்)’ வானொலி உரையின் போது, ​​இவர்களின் பணிகளைச் சிறப்பித்து பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

மோடிக்கு உற்சாக வரவேற்பு

தொடர்ந்து பிரதமர் மோடி, “இந்தப் படைப்பு வெறும் மொழிபெயர்ப்பு மட்டுமல்ல. இது, இரண்டு பெரிய கலாச்சாரங்களுக்கு இடையிலான பாலம் உள்ளது. மேலும், அரபு நாடுகளில் இந்திய இலக்கியம் பற்றிய புதிய புரிதலை உருவாக்குகிறது” என மோடி கூறியுள்ளார்.

முன்னதாக 2 நாள் பயணமாக குவைத் நாட்டுக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடியை, குவைத்தின் பாதுகாப்பு மற்றும் உள்துறை அமைச்சரான ஷேக் ஃபஹத் யூசப் சவுத் அல்-சபா வரவேற்றார்.

 

மோடியிடம் கோரிக்கை

முன்னதாக, வெள்ளிக்கிழமை, ஹண்டாவின் பேத்தி ஸ்ரேயா ஜுனேஜா, நானாஜியை சந்திக்கும்படி மோடியிடம் கோரிக்கை விடுத்தார், அதற்கு பதிலளித்த மோடி, “நிச்சயமாக! நான் இன்று குவைத்தில் நான் அவரை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” எனத் தெரிவித்து இருந்தார். 101 வயதான நானாஜி, முன்னாள் ஐ.எஃப்.எஸ் அதிகாரி ஆவார்.

குவைத்தில் இந்திய தொழிலாளர்கள்

குவைத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தின்படி, தனியார் துறை மற்றும் உள்நாட்டுத் துறை பணியாளர்கள் பட்டியலில் இந்தியத் தொழிலாளர்கள் முதலிடம் வகிக்கின்றனர்.
மேலும், 2023-24 நிதியாண்டில் 10.47 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள இருதரப்பு வர்த்தகத்துடன் குவைத் இந்தியாவின் சிறந்த வர்த்தக நண்பனாக திகழ்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ಬಿಸಿ ಬಿಸಿ ಸುದ್ದಿ

ಕ್ರಿಕೆಟ್ ಲೈವ್ ಸ್ಕೋರ್

ಚಿನ್ನ ಮತ್ತು ಬೆಳ್ಳಿ ಬೆಲೆಗಳು