200 தொகுதிகள் வெல்ல இலக்கு.. தொடங்கியது திமுக செயற்குழு கூட்டம்.. ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைமை செயற்குழு கூட்டம் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கி நடந்து வருகிறது. இந்த செயற்குழுவில் 2026 ம் ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலில் 200க்கும் அதிகமான தொகுதிகளில் வெல்ல வேண்டும் என்பது உள்பட பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது.தமிழ்நாட்டில் ஆளும் கட்சியாக திமுக உள்ளது. பொதுவாக இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு ஒரு முறை பொதுக்குழுவை கூட்ட வேண்டும். அதேபோல் ஆண்டுக்கு 2 முறை செயற்குழுவை கூட்டத்தை கூட்ட வேண்டும்.

dmk dmk working committee meeting mk stalinஅந்த வகையில் திமுகவின் செயற்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.

இந்த கூட்டத்துக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமை வகித்து வருகிறார். இந்த கூட்டத்தில் அமைச்சர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் கட்சியின் ஆக்கப் பணிகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. தமிழகத்தில் 2026 சட்டசபை தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் திமுக ஆட்சி அமைக்க வேண்டும் என்று ஸ்டாலின் கூறி வருகிறார்.

இதனால் 200க்கும் அதிகமான தொகுதிகளில் வெல் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அயராது உழைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக அம்பேத்கர் குறித்து ராஜ்யசபாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியது சர்ச்சையானது. இதனை கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என்று சொல்லப்படுகிறது.

அதேபோல் வெள்ள நிவாரண நிதி, பொது நிதி என்று மத்திய அரசு தமிழகத்துக்கு நிதி ஒதுக்குவதில் பாராமுகமாக இருப்பதாக தொடர்ந்து திமுக குற்றம்சாட்டி வருகிறது. இதனால் அதுதொடர்பாக மத்திய அரசை கண்டித்து இன்று தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என்று கூறப்படுகிறது.முன்னதா திமுக செயற்குழு கூட்டம் தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதல்வருமான முக ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார்.இந்த ஆலோசனை கூட்டத்தில் பொதுச் செயலாளர் துரைமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதோடு திமுகவின் இந்த செயற்குழு கூட்டம் கடந்த 18 ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கனமழை காரணமாக இந்த செயற்குழு கூட்டம் இன்றைய தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
VS NEWS DESK
Author: VS NEWS DESK

pradeep blr

ಬಿಸಿ ಬಿಸಿ ಸುದ್ದಿ

ಕ್ರಿಕೆಟ್ ಲೈವ್ ಸ್ಕೋರ್

ಚಿನ್ನ ಮತ್ತು ಬೆಳ್ಳಿ ಬೆಲೆಗಳು