பாலிவுட்டில் பிரபல நடிகரான சல்மான் கானின் நடிப்பில் 1989-ம் ஆண்டில் வெளிவந்த படம் மெய்னே பியார் கியா. இந்த படத்தில் நடித்ததற்காக பிலிம்பேரின் சிறந்த அறிமுக நடிகர் விருது அவருக்கு கிடைத்தது.
இந்நிலையில், பிரபல நடிகையான சுஷ்மிதா சென் அவருடைய டீன்-ஏஜ் பருவத்தில் சல்மான் கான் மீது கொண்ட காதலை பற்றி யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியின்போது நினைவுகூர்ந்துள்ளார்.
அதில், அந்த வயதில் தினசரி செலவு செய்ய எனக்கு கிடைக்கும் பணத்தில் சல்மான் கானின் போஸ்டர்கள், புகைப்படங்களை வாங்கி குவிப்பேன். அப்போது, அந்த படம் வெளிவந்தது. அவருடைய படத்தில் வந்தது என்பதற்காக புறாவின் புகைப்படம் ஒன்றையும் தன்னுடன் வைத்திருக்கிறார்.
தொடர்ந்து சென் கூறும்போது, வீட்டுப்பாடங்களை முடிக்காவிட்டால் போஸ்டர்களை தூர போட்டு விடுவோம் என பெற்றோர் கூறினார்கள். அதனால், வீட்டுப்பாடங்களை எப்போதும் சரியாக முடித்து விடுவேன். ஏனெனில், இந்த போஸ்டர்கள் எல்லாம் எனக்கு புனிதம் வாய்ந்தவை. நான் அவர் மேல் காதலில் இருந்தேன் என கூறியுள்ளார்.
10 ஆண்டுகளுக்கு பின்னர் சல்மான் கானுடன் பீவி நம்பர் 1 என்ற படத்தில் சுஷ்மிதா சென் நடித்துள்ளார். அப்போது, வீட்டில் அவருடைய அறை முழுவதும் சல்மான் கானின் போஸ்டர்கள் மற்றும் புகைப்படங்கள் ஆக்கிரமித்து இருந்த விசயங்களை அவரிடமே சுஷ்மிதா சென் கூறினார். அதன்பின் நாங்கள் இருவரும் நண்பர்களாகி விட்டோம் என்றும் சுஷ்மிதா சென் கூறியுள்ளார்.
Author: VS NEWS DESK
pradeep blr