பிரபல நடிகருக்கு ஜோடியாக சாய் பல்லவி… அடுத்த பட அப்டேட் இதோ

Sai Pallavi: அடுத்த ஆண்டு 2025-ன் தொடக்கத்தில் இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என்றும் ஆண்டின் இறுதியில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிகிறது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் சிவகார்த்திகேயனுடன் அமரன் படத்தில் நாயகியாக நடித்தார் சாய்பல்லவி. படம் சூப்பர் ஹிட அடித்ததை தொடர்ந்து அடுத்த படம் குறித்த தகவல் தற்போது வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் தாம் தூம் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக தனது நடிப்பை தொடங்கியவர் சாய் பல்லவி. கோத்தகிரியில் பிறந்த படுகர் இனத்தை சேர்ந்தவர் என்றாலும் இவர் படித்து வளர்ந்தது எல்லாம் கோயம்புத்தூரில் தான். இவரது முழு பெயர் சாய் பல்லவி செந்தாமரை ஆகும். மருத்துவ கல்வியை முடித்த அவர், நடிப்பின் மீது இருந்த ஆர்வம் காரணமாக சினிமா உலகில் அடியெடுத்து வைத்தார். வெள்ளிதிரைக்கு வருவதற்கு முன் சின்னத்திரையில் பல நடன போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார் சாய் பல்லவி. குறிப்பாக உங்களில் யார் அடுத்த பிரபு தேவா என்ற நடன நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார்.

பிரேமம் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான இவர் முதல் படத்திலேயே தென்னிந்தி ரசிகர்களை தன்வசம் கட்டி இழுத்துவிட்டார். சமீபத்தில் இவர் நடித்த கார்கி படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்திற்காக, சிறந்த நடிகைக்கான 3 விருதுகளை தட்டிச்சென்றார்.

இந்த நிலையில் தற்போது சாய் பல்லவி அமரன் படத்தில் நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் நாயகியாக சாய் பல்லவி நடித்துள்ளார். இந்தப் படம் தீபாவளியை முன்னிட்டு கடந்த 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் அமரன் படம் சூப்பர் ஹிட் அடித்தது. மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதில் மேஜர் முந்தின் மனைவி இந்து ரெபேகா வர்கீசாக நடிகை சாய் பல்லவி நடித்திருந்தார். பிரபலங்கள் பலரும் இந்த படத்தை வெகுவாக பாராட்டினர்.

இதனை தொடர்ந்து நடிகை சாய் பல்லவி சீதையாக நடித்த ‘ராமாயணம்’ படத்தின் வெளியீட்டு தேதி குறித்த தகவல் சமீபத்தில் வெளியானது. அதன்படி படத்தின் முதல் பாகம் 2026-ம் ஆண்டு தீபாவளிக்கும் இரண்டாம் பாகம் 2027-ம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் என்றும் அறிவிப்பை வெளியிட்ட்ள்ளனர்.

இந்த நிலையில் நடிகை சாய் பல்லவி அடுத்ததாக நடிக்க உள்ள படத்தின் அப்டேட் வெளியாகி வைரலாகி வருகின்றது. அதன்படி சாய் பல்லவி பிரபல இயக்குனர் வேணு யெல்டாண்டி இயக்கத்தில் உருவாகும் ‘எல்லம்மா’ என்ற படத்தில் பிரபல நடிகர் நித்தினுக்கு ஜோடியாக  நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

VS NEWS DESK
Author: VS NEWS DESK

pradeep blr

ಬಿಸಿ ಬಿಸಿ ಸುದ್ದಿ

ಕ್ರಿಕೆಟ್ ಲೈವ್ ಸ್ಕೋರ್

ಚಿನ್ನ ಮತ್ತು ಬೆಳ್ಳಿ ಬೆಲೆಗಳು