ஞானசேரன் பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்தது எப்படி? வெளியான பரபர தகவல்!

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கின் விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. மேலும், கைதான ஞானசேகரனை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்து வருகிறது.

சென்னை  அண்ணா பல்கலைக்கழகத்தில்  மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஞானசேகரன் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். ஞானசேகரனை 15 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்த சம்பவம் ஆளும் திமுகவுக்கு நெருக்கடியாக மாறியுள்ளது. மேலும், நேற்று எஃப்ஐஆர் நகல் சமூக வலைதளங்களில் வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  இதனால் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.  இந்த வழக்கில் தீவிர விசாரணை நடந்து வரும் சூழலில், பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது.

ஞானசேரன் பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்தது எப்படி?

மிகப் பெரிய பல்கலைக்கழகத்தில் வெளி ஆட்கள் வந்தது எப்படி? யார் அனுமதி கொடுத்தார்? போன்ற பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது.  மேலும், பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில், அமைச்சர் கோவி. செழியன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

கைதான ஞானசேகரன் அண்ணா பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்தது எப்படி என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், “அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவம் இரவு 8 மணி நடந்துள்ளது. கைதான ஞானசேரகன் அடிக்கடி அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வந்து சென்றிருக்கிறார்.

முழு விசாரணை நடந்துக் கொண்டிருக்கிறது. ஞானசேகரனின் மனைவி பல்கலைக்கழகத்தில் பணி புரிந்து வருகிறார். இதனால் அவரை பார்க்க ஞானசேகரன் அடிக்கடி பல்கலைக்கழகத்திற்கு வந்து சென்றுக் கொண்டிருந்தார். இதுகுறித்து விசாரணையில் முடிவில் தான் தெரியவரும். அவர் மீது எந்த சந்தேகமும் ஏற்படவில்லை.

இதனால் பல்கலைக்கழகத்திற்குள் நுழைய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இப்போது பல்கலைக்கழக நேரத்தை தவிர மற்ற நேரங்களில் யாராவது வந்தால் உரிய ஐடி கார்டை காண்பித்து பிறகு அனுமதி வழங்கப்படும்.

அமைச்சர் பரபரப்பு விளக்கம்

மேலும், கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் பெரும்பாலான இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த இடம் புதர் இருக்கும் பகுதி. இதனால் அங்கு சிசிடிவி கேமரா பொருத்தப்படவில்லை” என்றார்.

கோட்டூர்புரம் மண்டப சாலையில் பிரியாணிக்கடை நடத்தி வருகிறார். பல்கலைக்கழகத்திற்கு அருகில் அமைந்துள்ளத. ஞானசேகரன் திருமணம் ஆனவர். ஆனால் மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். அவர் மீது 15க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன. ஏற்கனவே 2011ஆம் ஆண்டில் இதே பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

அவரை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினார். அவரை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. அதே நேரத்தில் கைது செய்ய முயன்றபோது தப்பியோட முயற்சித்துள்ளார். அப்போது அவர் கீழே விழுந்ததால் அவரது இடதுகையும், இடது காலிலும் முறிவு ஏற்பட்டன. இதன்பின் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

VS NEWS DESK
Author: VS NEWS DESK

pradeep blr

ಬಿಸಿ ಬಿಸಿ ಸುದ್ದಿ

ಕ್ರಿಕೆಟ್ ಲೈವ್ ಸ್ಕೋರ್

ಚಿನ್ನ ಮತ್ತು ಬೆಳ್ಳಿ ಬೆಲೆಗಳು