HDFC FD : 7.90% வரை வட்டி வழங்கும் HDFC-ன் 5 சிறந்த FD திட்டங்கள்.. எவ்வளவு லாபம் கிடைக்கும்?

Fixed Deposit | உலகில் உள்ள ஏராளமான வங்கிகள் நிலையான வைப்பு நிதி திட்டங்களைஅ செயல்படுத்தி வரும் நிலையில், ஹெச்டிஎஃப்சி வங்கி செயல்படுத்தும் சிறப்பு அம்சங்களுடன் கூடிய 5 திட்டங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்

ஒவ்வொரு மனிதரும் தங்களின் பொருளாதார நிலைத்தன்மை மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக சேமிப்பு அல்லது முதலீடு செய்ய வேண்டும். சேமிப்பை விடவும் முதலீடு செய்வது சிறந்ததாக கருதப்படுகிறது. காரணம், முதலீடு செய்தால் பணத்தின் மதிப்பு கூடுதலாகும் ஆனால் பணத்தை சேமிக்கும் பட்சத்தில் பணத்தின் மதிப்பு அப்படியே இருக்கும். எனவே தான் பொதுமக்கள் முதலீடு செய்வதற்காக பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் FD (Fixed Deposit) எனப்படும் நிலையான வைப்பு நிதி திட்டம் ஆகும். இந்த திட்டத்தை பல வங்கிகள் செயல்படுத்தி வரும் நிலையில், HDFC வங்கி மூலம் செயல்படுத்தபப்டும் நிலையான வைப்பு நிதி திட்டங்களில் சிறந்த 5 திட்டங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

HDFC-ன் சிறந்த FD திட்டங்கள்

HDFC வங்கி சிறந்த வட்டி விகிதங்களை கொண்ட நிலையான வைப்பு நிதி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

கால அளவீடு  பொது குடிமக்கள்  மூத்த குடிமக்கள் 
21 மாதங்களுக்கான  திட்டம் 7 % 7.50%
15 மாதங்கள் முதல் 18 மாதங்கள் வரையிலான திட்டம் 7.10% 7.60%
18 மாதங்கள் முதல் 21 மாதங்கள் வரையிலான திட்டம் 7.25% 7.75%
2 ஆண்டுகள் 11 மாதங்கள்  வரையிலான திட்டம் 7.35% 7.85%
4 ஆண்டுகள் 7 மாதங்களுக்கான திட்டம் 7.40% 7.90%

திட்டங்களின் சிறப்பு அம்சங்கள் என்ன?

HDFC வங்கி செயல்படுத்தும் நிலையான வைப்பு நிதி திட்டங்களில் இந்த திட்டங்களுக்கு அதிக வட்டி வழங்கப்படுகிறதி. பொது குடிமக்களுக்கு அதிகபட்சமாக 7.40 சதவீதம் வட்டி வழங்கப்படும் நிலையில், மூத்த குடிமக்களுக்கு அதிகபட்சமாக சுமார் 7.90 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல லாபத்தை பெறலாம்.

முதலீடு மற்றும் லாபம்

4 ஆண்டுகள் 7 மாதங்களுக்கான திட்டத்தில் பொது குடிமக்களில் ஒருவர் ரூ.4 லட்சம் முதலீடு செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம். இந்த திட்டத்திற்கு பொது குடிமக்களுக்கு 7.40 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இந்த நிலையில் அந்த நபருக்கு முதலீட்டு தொகைக்காக வட்டி ஆண்டுக்கு ஒருமுறை வழங்கப்படும். அதன்படி, ஆண்டுக்கு ரூ.29,600 வட்டியாக கிடைக்கும். அதனை ஐந்து ஆண்டுகளுக்கு கணக்கு செய்தால் வட்டியாக மொத்தம் ரூ.1,18,400 கிடைக்கும். இதனுடன் முதலீடு செய்த தொகை ரூ.4 லட்சம் சேர்த்தால் மொத்தமாக திட்டத்தின் முடிவில் ரூ.5,18,400 கிடைக்கும்.

இதேபோல இந்த திட்டத்தில் மூத்த குடிமக்கள் ஒருவர் முதலீடு செய்கிறார் என்றால், அவருக்கு மொத்த வட்டியாக ரூ.1,26,400 கிடைக்கும். இதனுடன் அவர் முதலீடு செய்த தொகை ரூ.4 லட்சம் சேர்த்து மொத்தமாக ரூ.5,26,400 கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

VS NEWS DESK
Author: VS NEWS DESK

pradeep blr

ಬಿಸಿ ಬಿಸಿ ಸುದ್ದಿ

ಕ್ರಿಕೆಟ್ ಲೈವ್ ಸ್ಕೋರ್

ಚಿನ್ನ ಮತ್ತು ಬೆಳ್ಳಿ ಬೆಲೆಗಳು