விஜயகாந்த் எப்படிப்பட்டவர் என்பதை அவரது மறைவுக்கு மட்டுமல்ல இன்றைக்கும் அவரின் படங்கள், பாட்டுக்கள், பேச்சுக்கள் ஆகியவற்றைக் கேட்டால் ஒருதுளி கண்ணீராவது எட்டிப்பார்க்கும் அளவுக்கு கடைசி வரை அன்பை பிராதனமாக கொண்டு செயல்பட்டவர் என்றே கூறும் அளவுக்கு வாழ்ந்தவர்
விஜயகாந்த் நடித்த ரமணா படத்தில் ஒரு காட்சியில் வசனம் ஒன்று இடம் பெற்றிருக்கும். அதாவது “ஒரு மனுஷன் பிரிவுக்காக நாடே அழுதால் அவர் ஒரு நல்ல தலைவன்”. அப்படிப்பட்ட நல்ல தலைவனாக, மனிதனாக திகழ்ந்த விஜயகாந்த் மறைந்து இன்றோடு (டிசம்பர் 28) ஓராண்டுகள் நிறைவடைந்துள்ளது. கேப்டன் என அன்போடு அனைவராலும் அழைக்கப்பட்டவர், அரசியல் களத்தில் தைரியமாக கருத்துக்களை வெளிப்படுத்தியவர், கடனில் மூழ்கிக் கொண்டிருந்த நடிகர் சங்கத்தை மீட்டுக் கொடுத்தவர், இல்லை என வருவோருக்கு வயிறார சாப்பாடும், போதும் என்கிற அளவுக்கு பணமும் கொடுத்து உதவி செய்தவர் என விஜயகாந்தை பற்றி நாம் சொல்லிக் கொண்டே போகலாம். 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி காலை உடல்நலக்குறைவால் அவர் உயிரிழந்தார் என்ற செய்தி வந்த போது தமிழகமே இடிந்து போயிருந்தது. மீண்டும் வருவார், மீண்டு வருவார் என நினைத்துக் கொண்டிருந்த அனைவருக்கும் நெஞ்சில் இடியே இறக்கிறது போல அந்த தகவல் வந்திருங்கியது.
சினிமாவில் கேப்டன்
நாராயணசாமி என்ற இயற்பெயர் கொண்ட விஜயகாந்த் சினிமா வாய்ப்புக்காக தனது பெயரை விஜயராஜ் இனம் மாற்றிக் கொண்டார்.இனிக்கும் இளமை படத்தின் மூலம் வில்லனாக நடித்து விஜயராஜ் என்ற பெயரை விஜயகாந்தாக மாற்றினார். ஹீரோவாக நடித்த முதல் 5 படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இதன்பிறகு எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய சட்டம் ஒரு இருட்டறை என்ற படத்தில் நடித்தார். அந்தப் படம் சூப்பர் ஹிட் ஆன நிலையில் அதற்கு முன்பாக யாரெல்லாம் விஜயகாந்தை நிறத்தை வைத்து ஒதுக்கினார்களோ அவர்களே கால்ஷீட்டுக்காக காத்துக் கிடந்த நிலை உருவானது.
தன்னுடைய இரண்டாவது படமான அகல்விளக்கு ஷூட்டிங்கில் காலை உணவு சாப்பிட விடாமல் படக்குழுவினர் தடுத்து மதியம் வரை காத்திருக்க வைத்து விட்டனர். இதன் காரணமாக படப்பிடிப்பில் யாரும் பசியுடன் இருக்கக் கூடாது, கடைநிலை ஊழியர் வரை தான் என்ன சாப்பிடுகிறேனோ அந்த உணவு இருக்க வேண்டும் என்ற முறையை கொண்டு வந்து கடைசி வரை பின்பற்றியவர் விஜயகாந்த் தான்.
விஜயகாந்துக்கு எல்லாமே அவருடைய நண்பர் இப்ராஹிம் ராவுத்தர் தான். விஜயகாந்தின் வளர்ச்சிக்கு ஏணிப்படியாக இருந்தவர். கதை கேட்பது தொடங்கி வரவு செலவு கணக்கு வரை அத்தனையும் இப்ராஹிம் ராவுத்தர் தான் பார்த்தார். அவரின் பேச்சுக்கு விஜயகாந்த் மறுப்பேச்சு பேசியதே கிடையாது. தன்னை தேடி வந்து உதவி கேட்பவர்களுக்கு இல்லை என்ற சொல் அவரது வார்த்தையில் கூட வராது. அந்த அளவுக்கு சினிமாவில் உச்சத்தில் இருந்த போதும் யாரும் கஷ்டத்தில் இருந்து விடக்கூடாது என நினைத்தவர்.
இன்றைக்கு சினிமாவில் பிரபலமாக இருக்கும் பலரும் அன்றைக்கு விஜயகாந்த் ஆஃபீஸ் என்றால் இன்றைய நாளுக்கான சாப்பாடு கிடைத்துவிடும் என நம்பிக்கையோடு சென்று வந்தவர்கள் தான். ரஜினி, கமல் ஆகிய இரு நட்சத்திரங்கள் உச்சத்தில் இருந்தபோது அவர்களுக்கு கடுமையான டஃப் கொடுத்த விஜயகாந்த். தமிழ் சினிமாவில் எல்லோருக்கும் நூறாவது படம் பெரிய அளவில் கை கொடுக்காது. ஆனால் கேப்டன் பிரபாகரன் என்ற படத்தை கொடுத்து உயிர் மூச்சு உள்ளவரை மக்கள் தன்னை கேப்டன் என அழைப்பார்கள் என அவரே நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.
1984 ஆம் ஆண்டு மட்டும் 18 படங்களில் நடிக்கும் அளவுக்கு பிசியான நடிகராக வலம் வந்த விஜயகாந்த் 153 படங்களில் நடித்துள்ளார். 1999 ஆம் ஆண்டு நடிகர் சங்க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் பல்வேறு நாடுகளில் கலை நிகழ்ச்சிகள் நடத்தி நடிகர் சங்க கடனை அடைத்தார். நடிகராக இருந்தபோது பொது பிரச்சினைகளுக்கும் நடிகர் சங்கம் மூலம் குரல் கொடுக்கத் தொடங்கினார். 2000 ஆண்டு ரசிகர் மன்றத்துக்கு என தனியாக கொடியை அறிமுகப்படுத்தினார். 2001 ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் விஜயகாந்த் ரசிகர் மன்றம் சார்பில் பலரும் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றனர். தொடர்ச்சியாக தனது படங்களில் கட்சிக்கொடியை இடம்பெறச் செய்ததுடன் அரசியல் வசனங்களையும் வைத்தார் விஜயகாந்த்.
அரசியல் பயணம்
2005 ஆம் ஆண்டு தேமுதிக கட்சியை அதிகாரப்பூர்வமாக தொடங்கினார் விஜயகாந்த். மதுரையில் மிகப்பெரிய மாநாடு நடத்தி ஒட்டுமொத்த அரசியல் களமும் திரும்பிப் பார்க்க வைத்தார். 2006 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் விருத்தாச்சல தொகுதியில் அவர் கட்சி சார்பில் விஜயகாந்த் மட்டுமே வெற்றி பெற்றார். 232 தொகுதிகளில் தனித்து போட்டியிட்ட தேமுதிக ஒரு வெற்றி மட்டுமே பெற்றது. இதன் பிறகு 2011 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து எதிர்க்கட்சித் தலைவராக அமர்ந்தார்.
ஆனால் நேர்மை எல்லா இடத்திலும் சரியாக அமையாது என்பதற்கு விஜயகாந்த் ஒரு உதாரணமாக மாறினார். கூட்டணியில் இருந்து கொண்டு அதிமுகவை எதிர்த்து கேள்வி கேட்டதால் எதிர்க்கட்சித் தலைவர் பதவி இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். இதற்கிடையில் அவரது உடல் நிலையும் ஒத்துழைக்காமல் போனதால் விஜயகாந்தின் அரசியல் வாழ்க்கை இரக்கத்தை சந்திக்க ஆரம்பித்தது. தனது கம்பீரக் குரலால் பேச்சுக்களில் அனல் தெறிக்க விட்ட விஜயகாந்த் ஒரு கட்டத்தில் பேசக்கூட முடியவில்லை.
அவரது குரலை கேட்காமல் தொண்டர்கள் மட்டுமல்ல தமிழ்நாட்டின் ரசிகர்கள் கூட கலங்கி போனார்கள். 2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு விஜயகாந்த் மட்டுமல்ல தேமுதிக கட்சியும் பெரிய அளவில் சரிவை சந்தித்தது. தனக்கென தனிப்பாதை அமைத்து தான் இருந்தாலும் என்றைக்கும் தன்னை மறக்காமல் தமிழ்நாட்டு மக்கள் இருப்பார்கள் என்பதை செயலின் மூலம் விஜயகாந்த் செய்து காட்டியுள்ளார். விஜயகாந்த் மீது மக்கள் எந்த அளவுக்கு அன்பு வைத்திருக்கிறார்கள் என நீங்கள் யோசித்தால் ஒரு கணம் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்கு சென்ற பார்க்கலாம். வாகனங்கள் பிடித்துக் கொண்டு வெளியூரில் இருந்து தினசரி ஒரு கூட்டம் விஜயகாந்தின் நினைவிடத்திற்கு வருகை தந்து கொண்டுதான் இருக்கிறது. விஜயகாந்த் உடல் மறைந்தாலும் அவரின் நினைவுகள் என்றைக்கும் மறக்கப்படாதது.
Author: VS NEWS DESK
pradeep blr