4 நாட்கள் இயங்காது.. தமிழ்நாடு அரசின் இணைய வழி பட்டா சேவை நிறுத்தம்!

தமிழ்நாடு அரசின் பல்வேறு சேவைகளும் ஆன்லைன் வாயிலாக கிடைப்பதால் பொதுமக்கள் அலைச்சலின்றி அதனைப் பெறும் வசதிகளும் உள்ளது. அதேசமயம் அவ்வப்போது சூழலுக்கு ஏற்ப இணையதளமும் அப்டேட் செய்யப்பட்டு சேவை விரைவாக கிடைக்கும்படி செய்யப்படுகிறது.

தமிழ்நாடு அரசின் ஆன்லைன் பட்டா வழங்கும் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் கீழ் இயங்கும் இணைய வழி பட்டா மாறுதல் சேவை நான்கு நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. அந்த சேவையின் மென்பொருளான தமிழ் நிலம் தொழில்நுட்ப பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக நில அளவை மற்றும் நில வரை திட்ட இயக்குனர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின் அனைத்து சேவைகளும் இணைய வழியில் கிடைக்கும் பொருட்டு டிஎன் இசேவை என்ற இணையதள பக்கம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் திட்டங்கள், துரை ரீதியாக இடம்பெற்றிருக்கும். நமக்குத் தேவையான சான்றிதழ்களை நாம் ஆன்லைன் வழியாக விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளும் வழிமுறைகளும் உள்ளது.

இதனை அரசு அலுவலகத்தில் சென்று தான் விண்ணப்பிக்க வேண்டும் என்றெல்லாம் இல்லை. சாதாரண மக்களும் விண்ணப்பிக்கும் வகையில் இந்த இணையதளமானது உருவாக்கப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ் நிலம் செயலி அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. இதன் வழியாக பட்டா விவரங்கள் பற்றி அறியும், புதிய பட்டாக்களுக்கு விண்ணப்பிக்கவும், மாறுதல் செய்யவும் வசதிகள் இடம் பெற்றிருந்தது.

இந்த இணையதளம் வாயிலாக பொதுமக்கள் எந்த பகுதியில் இருந்தாலும் பட்டா மாறுதல் கூறி விண்ணப்பிக்க முடியும். அது மட்டுமல்லாமல் பட்டா சிட்டா சரிபார்க்க மற்றும் பார்வையிடவும், அரசின் புறம்போக்கு நிலம் தொடர்பான விவரம், நகர நில அளவை வரைபடம், உட்பிரிவு மற்றும் உள்பிரிவில்லாத பட்டா மாறுதல் விண்ணப்பங்கள், நில அளவீடு செய்தல் என ஏராளமான வசதிகளை இந்த இணையதளம் மூலம் நாம் பார்க்க முடியும். 24 மணி நேரமும் செயல்படும் இந்த இணையதளம் வாயிலாக நாம் விண்ணப்பிக்கும் போது அதற்கான கட்டணத்தையும் ஆன்லைன் வழியாகவே நாம் செலுத்தலாம்.

இப்படி ஏகப்பட்ட வசதிகளை கொண்ட இந்த இணையதள பக்கம் அவ்வப்போது அப்டேட் செய்யப்படுவது வழக்கம். கடந்தாண்டு கூட ஒவ்வொரு மனுதாரரும் அங்கீகரிக்கப்பட்ட வீட்டுமனை பிரிவில் மனைகளை கிரயம் செய்யும் போது ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக மனு அளிக்கும் சூழல் இருந்தது. இதனை மாற்றி ஒரே முறையில் வீட்டுமனைகளை கிரயம் செய்ய வசதிகள் ஏற்படுத்தப்பட்டு அது மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த இணையதளம் வாயிலாக ஒவ்வொரு மாதமும் தமிழ்நாடு முழுவதும் இருந்து இரண்டு லட்சம் உட்பிரிவு மனுக்கள் பெறப்பட்டு அவற்றின் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் மூலமாக பொதுமக்கள் நில மோசடி பாதிப்பிலிருந்து தடுக்கப்படுகிறார்கள். இப்படியான நிலையில் இணைய வழி பட்டா சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி டிசம்பர் 28ஆம் தேதி காலை 10 மணி முதல் 31ஆம் தேதி மாலை 4 மணி வரை https://tamilnilam.tn.gov.in/Revenue/ தளம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

VS NEWS DESK
Author: VS NEWS DESK

pradeep blr

ಬಿಸಿ ಬಿಸಿ ಸುದ್ದಿ

ಕ್ರಿಕೆಟ್ ಲೈವ್ ಸ್ಕೋರ್

ಚಿನ್ನ ಮತ್ತು ಬೆಳ್ಳಿ ಬೆಲೆಗಳು