மறைந்த மன்மோகன் சிங் உடலானது யமுனா நதிக்கரையில் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டப்பின் அந்த இடத்தில் நினைவிடம் அமைக்கப்படும் என காங்கிரஸ் கட்சியின் கோரிக்கைக்கு பாஜக அரசு சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படும் நிலையில் ஷர்மிஸ்தா முகர்ஜியின் கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சி மீது சாடல்
சி.ஆர்.கேசவன் தனது பதிவில், “ஒரு காங்கிரஸ் தலைவர் பிரதமருக்கு கடிதம் எழுதுவது உண்மையில் நகைப்புக்குரியதாக உள்ளது. மரபுகள் மற்றும் இறுதி ஊர்வலம் ஒரு நினைவுச்சின்னத்திற்கான புனிதமான இடமாக மாறும். 2004 ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் காங்கிரஸ் தலைமையிலான அரசு இருந்தும் அவருக்கு நினைவிடம் கட்டவில்லை என்பதை கார்கேவுக்கு நினைவூட்ட வேண்டும் என நினைக்கிறேன். 2004-2014 வரை ஆட்சியில் இருந்த 10 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி நரசிம்ம ராவுக்கு நினைவிடம் கட்டவே இல்லை.
ஆனால் அவருக்கு 2015 ஆம் ஆண்டு ஒரு நினைவுச்சின்னத்தை நிறுவி, 2024 ஆம் ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கி மறைவுக்குப் பின் அவரைக் கௌரவித்தவர் பிரதமர் மோடி மட்டும் தான். மன்மோகன் சிங்கின் ஊடக ஆலோசகர், சஞ்சய பாரு எழுதிய புத்தகத்தில் நரசிம்ம ராவ் மறைந்தபோது அவருடைய தகனம் டெல்லியில் நடைபெறுவதை காங்கிரஸ் கட்சி விரும்பவில்லை என்றும், மாறாக ஹைதராபாத்தில் நடைபெறுவதை காங்கிரஸ் விரும்பியதாகவும் குறிப்பிட்டார். இதை நரசிம்ம ராவின் பிள்ளைகளுக்கு தெரிவிக்க தன்னை அணுகியதாகவும் தெரிவித்துள்ளார். அவரின் உடல் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைமையகத்தில் வைக்கப்படாத நிலையில், ஹைதராபாத்தில் தகனம் செய்யப்பட்டது. கொள்கையற்ற காங்கிரஸின் வரலாற்றுப் பாவங்களை நம் தேசம் ஒருபோதும் மறக்கவோ மன்னிக்கவோ முடியாது”என கூறியிருந்தார்.
பிரணாப் முகர்ஜி மகள் விமர்சனம்
இதற்கு பதிலளித்த ஷர்மிஸ்தா முகர்ஜி, “ஆகஸ்ட் 2020 ஆம் ஆண்டு தனது தந்தையும் முன்னாள் இந்திய குடியரசுத்தலைவருமான பிரணாப் முகர்ஜி இறந்தபோது, காங்கிரஸ் செயற்குழுவின் இரங்கல் கூட்டத்தைக் கூட்ட காங்கிரஸ் தலைமை கவலைப்படவில்லை.இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைமை தன்னை தவறாக வழிநடத்தியது. அவரை பொறுத்தவரை இந்திய குடியரசுத்தலைவர்களுக்கு இது கிடையாது என மூத்த தலைவர் ஒருவர் கூறினார். ஆனால் மற்றொரு முன்னாள் இந்திய குடியரசுத்தலைவரான கே.ஆர். நாராயணனின் மறைவுக்குகாங்கிரஸ் செயற்குழுவின் கூட்டம் கூட்டப்பட்டு இரங்கல் செய்தி வாசிக்கப்பட்டது என்பதை தனது தந்தையின் நாட்குறிப்புகளில் இருந்து தெரிந்து கொண்டேன்” என தெரிவித்துள்ளார்.