QR Scam : UPI Scan Tips : யூபிஐ ஸ்கேன் செய்பவரா நீங்கள்.. உஷார்.. இந்த விஷயங்களை கவனிக்க மறக்காதீங்க!

Cyber Crime | இந்தியாவில் சைபர் கிரைம் குற்றங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. போன் கால், குறுஞ்செய்தி உள்ளிட்டவற்றை பயன்படுத்தி மோசடி செய்து வந்த நபர்கள் தற்போது QR கோடுகளை பயன்படுத்தி மோசடி செய்ய தொடங்கிவிட்டனர்.

QR Scam : UPI Scan Tips : யூபிஐ ஸ்கேன் செய்பவரா நீங்கள்.. உஷார்.. இந்த விஷயங்களை கவனிக்க மறக்காதீங்க!

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே யுபிஐ சேவையின்ப யன்பாடு அதிகரித்து காணப்படுகிறது. பெரிய நகரங்கள் முதல், கடைகோடி கிராமங்கள் வரை அனைத்து இடங்களிலும் யுபிஐ சேவைகள் பயன்படுத்தப்படுகின்றன. யூபிஐ சேவையை பயன்படுத்தும் பொதுமக்கள் விரைவாக பணம் பரிமாற்றம் செய்வதற்காக QR கோடுகளை பயன்படுத்தி பணம் செலுத்துகின்றனர். ஆனால் இதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. சமீப காலமாக, QR கோடுகளை பயன்படுத்தி மோசடி சம்பவங்கள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. அதாவது, கடைகளில் பணம் செலுத்துவது, யாரேனும் ஒரு நபருக்கு பணம் செலுத்தும் போது பொதுமக்கள் இவ்வாறு பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். எனவே, இத்தகைய QR கோடு மோசடிகளில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

QR கோடுகள் மூலம் மோசடிகள் நடைபெறுவது எப்படி?

பொதுவாக விரைவாக பணம் செலுத்துவதற்காக பொதுமக்கள் QR கோடுகளை பயன்படுத்துகின்றனர். இதனால், கடைகளிலும் கூட QR கோடுகள் வைக்கப்பட்டுகின்றன. இவ்வாறு வைக்கப்படும் QR கோடுகளை ஸ்கேன் செய்து பணம் அனுப்பும்போது பொதுமக்கள் எதிர்பாராத சிக்கல்களில் சிக்கிக்கொள்கின்றனர். அதாவது, QR கோடுகள் மூலம் மோசடி செய்யும் நபர்கள் சிலர் போலி QR கோடுகளை வைக்கின்றனர். அதனை சாதாரன QR கோடுகள் என நம்பும் பொதுமக்கள் ஸ்கேன் செய்து பணத்தை அனுப்ப முயற்சிக்கும்போது மோசடிக்காரர்கள், பணம் அனுப்பும் நபரின்  மொபைல் போனில் மால்வேரை அந்த நபருக்கே தெரியாமல் இறக்கி விடுகின்றனர். அதன் மூலம் அந்த நபரின் வங்கி கணக்கு எண், கடவுச்சொல்  உள்ளிட்ட விவரங்களை திருடி உடனே வங்கி கணக்கில் இருக்கும் மொத்த பணத்தையும் எடுத்து விடுகின்றனர்.

QR கோடு மோசடிகளில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி?

  • QR கோடுகளை ஸ்கேன் செய்வதற்கு முன்பாக நீங்கள் பணம் அனுப்பும் நபரின் பெயர் உள்ளிட்ட விவரங்களை உறுதி செய்து கொள்ளுங்கள்.
  • சந்தேகத்திற்கு உரிய இடங்கள் மற்றும் நபர்களின் QR கோடுகளை ஸ்கேன் செய்யாதீர்கள்.
  • இணைய பண பரிவர்த்தனை செய்யும் போது, அவசரமாக செய்யாதீர்கள்.
  • ஒவ்வொரு லிங்குகளையும் அதன் பாதுகாப்பை உறுதி செய்த பிறகு செய்யுங்கள்.
  • ஆன்லைன் பண பரிவர்த்தனைகளுக்கு, அதிகாரப்பூர்வ மற்றும் பாதுகாப்பான செய்திகளை பயன்படுத்துங்கள்.

ஒவ்வொரு முறையும் QR கோடு மூலம் பணம் செலுத்துவதற்கு முன்பாக மேற்குறிப்பிட்ட விஷயங்களை உறுதி செய்துக்கொள்ளுங்கள்.

VS NEWS DESK
Author: VS NEWS DESK

pradeep blr

ಬಿಸಿ ಬಿಸಿ ಸುದ್ದಿ

ಕ್ರಿಕೆಟ್ ಲೈವ್ ಸ್ಕೋರ್

ಚಿನ್ನ ಮತ್ತು ಬೆಳ್ಳಿ ಬೆಲೆಗಳು