கோலிவுட் சினிமாவின் கேப்டனாக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த். நடிப்பு மட்டும் இன்றி மக்கள் பணியிலும் சிறந்து விளங்கிய கேப்டன் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று. இந்த நிலையில் அவரது நடிப்பில் வெளியான சிறந்த 10 படங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.

நூறாவது நாள் 1984 இல் வெளிவந்த மிஸ்ட்ரி இன்வெஸ்டிகேஷன் பாணியில் உருவான படம் ஆகும் இத்திரைப்படத்தை நடிகரும் இயக்குநருமான மணிவண்ணன் எழுதி இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் விஜயகாந்து, மோகன், நளினி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இவர்களுடன் இணைந்து தேங்காய் சீனிவாசன், ஜனகராஜ், சத்யராஜ் ஆகியோர் நடித்திருந்தனர்.

வைதேகி காத்திருந்தாள் 1984-ஆம் ஆண்டு இயக்குநர் ஆர். சுந்தர்ராஜன் இயக்கத்தில் வெளிவந்த படமாகும். இத்திரைப்படத்தில் விஜயகாந்த், ரேவதி மற்றும் பலர் நடித்திருந்தனர். இசையமைப்பாளர் இளையராஜா இசையில் வெளியான அனைத்து பாடல்களும் இந்தப் படத்தில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. வணிக ரீதியில் வெற்றிப் படமாக அமைந்த இது விஜயகாந்த்தின் சினிமா வாழ்வில் ஒரு முக்கிய படமாக அமைந்தது.

ஊமை விழிகள் 1986 ஆம் ஆண்டு இயக்குநரும் நடிகருமான அரவிந்த்ராஜ் இயக்கத்தில் உருவான படம். இதில் விஜயகாந்த் முதன்மையான வேடத்தில் நடித்தார். அருண் பாண்டியன், கார்த்திக், ஜெய்சங்கர், சரிதா, இரவிச்சந்திரன், மலேசியா வாசுதேன், சந்திர சேகர், விசு, ஸ்ரீ வித்யா, டிஸ்கோ சாந்தி உட்பட பலர் நடித்திருந்தனர்.

அம்மன் கோயில் கிழக்காலே என்பது 1986-ம் ஆண்டு இயக்குநர் ஆர். சுந்தர்ராஜன் இயக்கத்தில் வெளியான படமாகும். இப்படத்தில் விஜயகாந்த், ராதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.

பூந்தோட்ட காவல்காரன் திரைப்படம் 1988-ம் ஆண்டு அறிமுக இயக்குநர் செந்தில்நாதன் இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் விஜயகாந்த், ராதிகா, ஆனந்த், வாணி விசுவநாத் மற்றும் லிவிங்ஸ்டன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்தப் படத்திற்கு இளையராஜா இசையத்திருந்தார்.

சின்ன கவுண்டர் 1992-ம் ஆண்டு ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில் உருவான படம் ஆகும். இதில் விஜயகாந்த், சுகன்யா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இவர்களுடன் இணைந்து ஆச்சி மனோரமா, செந்தில், கவுண்டமணி என பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர்.

கேப்டன் பிரபாகரன் 1991-ம் ஆண்டு இயக்குநர் ஆர். கே. செல்வமணி இயக்கத்தில் வெளியான அதிரடித் திரைப்படமாகும். இதில் விஜயகாந்து கதாநாயகனாக நடித்திருந்தார். இந்தப் படத்தின் மூலம் தான் வில்லன் மற்றும் நகைச்சுவை நடிகர் மன்சூர் அலி கான் அறிமுகமானார். நடிகர் சரத்குமார் சிறப்பு வேடத்தில் நடித்திருந்தார். இளையராஜா இசையமைத்திருந்தார். இத்திரைப்படம் நடிகர் விஜயகாந்து நடித்த 100-வது படமாகும். இப்படம் மூலம் விஜயகாந்து கேப்டன் எனும் அடைமொழியைப் பெற்றார்.

சேதுபதி ஐ.பி.எஸ் 1994-ல் வெளிவந்த திரைப்படமாகும். விஜயகாந்த் நடித்த இப்படத்தை பி. வாசு இயக்கினார். இந்தப் படத்தில் விஜயகாந்துடன் இணைந்து மீனா, நம்பியார், ஸ்ரீவித்யா, கவுண்டமணி, செந்தில் ஆகியோர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் இளையராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார்.

கண்ணுபடப்போகுதய்யா 1999-ம் ஆண்டு இயக்குநர் பாரதி கணேஷ் இயக்கத்தில் வெளியான பட்ம் ஆகும். இந்தப் படத்தில் விஜயகாந்த், சிம்ரன் மற்றும் கரண், லக்ஷ்மி, ஆனந்த்ராஜ், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் வணிக ரீதியில் வெற்றிப்படமாக அமைந்தது.

வானத்தைப்போல படம் 2000-ம் ஆண்டில் இயக்குநர் விக்ரமன் இயக்கத்தில் வெளிவந்ததாகும். இந்தப் படத்தில் விஜயகாந்த் உடன் இணைந்து மீனா, பிரபுதேவா, லிவிங்ஸ்டன், கௌசல்யா, அஞ்சு அரவிந்த் மற்றும் பலர் நடித்துள்ளதுனர். இந்த படத்திற்கு எஸ். ஏ. ராஜ்குமார் இசையமைத்துள்ளார். இந்தப் படம் தேசிய திரைப்பட விருதை வென்றதுடன் இரண்டு தமிழக அரசு திரைப்பட விருதுகளையும் வென்றது.