நடிகை பார்வதி நாயர் மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இணையத்தளத்தில் வைரலாகி வருகிறார்.
மலையாள சினிமா மூலம் திரை துறையில் அறிமுகமானவர் நடிகை பார்வதி நாயர். மலையாளத்தில் ஏகப்பட்ட படங்களில் கதாநாயகியாக வலம் வந்த பார்வதியின் கவனம், தமிழ் சினிமா பக்கம் திரும்பியது.
2/7
நடிகர் அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தனது முதல் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஓரளவுக்கு ஈர்த்த பார்வதி, உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
3/7
தொடர்ந்து தமிழில் பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் மீண்டும் மலையாள சினிமாவுக்கே போய்விட்டார். மலையாளத்தை தொடர்நது சில கன்னட படங்களில் முன்னணி நடிகையாக நடிக்க பார்வதிக்கு வாய்ப்பு கிடைத்தது.
4/7
மலையாளத்தில் அதிக ரசிகர்கள் கூட்டத்தை கொண்ட பார்வதிக்கு தமிழில் சொல்லும் அளவிற்கு ரசிகர்கள் கூட்டம் இல்லை. திரைப்படங்களையும் தாண்டி மாடலிங் துறையிலும் பார்வதி கலக்கி வருகிறார்.
5/7
சமூகவலைத்தளங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் பார்வதி, அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.
6/7
2 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் கூட்டத்தை கொண்ட பார்வதியின் தங்கை பிரியா நாயரின் புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
7/7
அந்தவகையில் பார்வதி நாயரின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் சோசியல் மீடியாக்களில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.