New Year 2025: புத்தாண்டு கொண்டாட்டம்.. சென்னை கடலில் இறங்கத் தடை.. விடிய விடிய கண்காணிப்பு!

தமிழ்நாட்டில் இத்தகைய புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது விபத்துகளும் நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக போலீசாரின் தீவிர கண்காணிப்பில் விபத்தில்லா புத்தாண்டு கொண்டாட்டம் அரங்கேறி வருகிறது.2025 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு பிறப்பதையொட்டி சென்னை மாநகர போக்குவரத்துக் காவல்துறை பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டு முடிந்து 2025 ஆம் ஆண்டை சிறியவர் முதல் பெரியவர் வரை மிகுந்த ஆவலுடன் தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். நாளை மறுநாள் (டிசம்பர் 31) மாலை முதலே புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடங்கி விடும். விடிய விடிய புத்தாண்டு கொண்டாட்டங்கள் இருக்கும் நிலையில் சென்னையிலும் புத்தாண்டு கொண்டாட்டம் என்பது மிகவும் பிரபலமானது. குறிப்பாக மெரினா கடற்கரையில் மக்கள் கூடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.இப்படியான நிலையில் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு பொதுமக்கள் பாதுகாப்பு தொடர்பாக சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் தலைமையில்   கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது.

இதில் காவல்துறையின் மூத்த அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, டிசம்பர் 31 ஆம் தேதி இரவு 9 மணியில் இருந்து கடற்கரை, வழிபாட்டு தலங்கள் என பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தனிக் கவனம் செலுத்தி  காவல் அதிகாரிகள், காவல் ஆளிநர்கள் மற்றும் ஊர்காவல் படையினர் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும் முக்கிய சாலைகளில் வாகன நெரிசல் ஏற்படுவதை தடுத்தல், அதிவேகமாக செல்பவர்கள், சாலையில் பந்தயத்தில் ஈடுபடுவர்கள் ஆகியோரை தடுத்து  ககண்காணிப்பு சோதனை குழுக்களை அமைக்கப்பட வேண்டும். இதனால் விபத்தில்லா புத்தாண்டு கொண்டாடுவதற்கு சிறப்பாக காவல்துறை பணி செய்ய வேண்டும்.

கடலில் இறங்க, குளிக்கத் தடை 

அதுமட்டுமல்லாமல் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு டிசம்பர் 31 ஆம் தேதி மாலை முதல் ஜனவரி 1 ஆம் தேதி வரை பொதுமக்கள் கடலில் இறங்கவோ, குளிக்கவோ அனுமதி கிடையாது. அதற்கேற்ப கடற்கரையோரங்களில் உரிய தடுப்புகள் அமைத்து முன்னேற்பாடுகள் செய்யப்படும். மெரினா, சாந்தோம், எலியட்ஸ் மற்றும் நீலாங்கரை ஆகிய கடற்கரை  பகுதிகளில் காலல் ஆளிநர்கள், குதிரைப்படைகள் மற்றும் ATV (AI Torran Votio) எனப்படும் மணலில் செல்லக்கூடிய வாகணங்கள் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்படுவார்கள். அப்பகுதியில் தற்காலிகமாக காவல்துறை கண்காணிப்பு நிலையம் செயல்படும்.

மேலும் மெரினா, சாந்தோம் மற்றும் காமராசர் சாலை பகுதியில் உதவி மைய கூடாரம் அமைக்கப்பட்டு ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பு பணிகள் நடைபெறும்.

இளைஞர்களுக்கு கடும் எச்சரிக்கை

கடற்கரை பகுதிகளில் தமிழ்நாடு காவல்துறை மற்றும் கடலோர பாதுகாப்பு குழுமம் ஆகியவை சென்னை மெரினா கடற்கரை உயிர் காக்கும் பிரிவினருடன் இணைந்து எச்சரிக்கை பதாகைகள் பொருத்தப்பட்டு யாரும் கடலில் மூழ்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் அவசர மருத்துவ உதவிக்கு பொதுமக்கள் கூடும் இடங்களில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மருத்துவக் குழுவினருடன் தயார் நிலையில் நிறுத்தி வைக்க ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. மேலும் மது அருந்திவிட்டு வாகனங்கள் ஓட்டினால் அவை பறிமுதல் செய்யப்படுவதோடு கடுமையான நடவடிக்கை ஏற்படும். ஒருவேளை வழக்குப்பதிவு செய்ய நேரிட்டால் அது பாஸ்போர்ட், வேலை வாய்ப்பு உள்ளிட்டவைகளில் சிக்கலை ஏற்படுத்தும் என்பதால் இளைஞர்கள் மது அருந்தி வாகனம் ஓட்டத்தை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VS NEWS DESK
Author: VS NEWS DESK

pradeep blr

ಬಿಸಿ ಬಿಸಿ ಸುದ್ದಿ

ಕ್ರಿಕೆಟ್ ಲೈವ್ ಸ್ಕೋರ್

ಚಿನ್ನ ಮತ್ತು ಬೆಳ್ಳಿ ಬೆಲೆಗಳು